IndiaNews

தெலங்கானா ஆளுனராக தமிழிசை நியமனம்

செப்டம்பர் 1,2019

தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநிலத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஐந்து மாநிலங்களுக்கான ஆளுனர்களை இன்று அறிவித்திருந்தார். தமிழிசை சவுந்தரராஜன் இவ்வைவருள் ஒருவராவார்.