தென் ஒன்ராறியோ, கியூபெக்கில் நாளை 40 செ.மீ. பனி வீழ்ச்சி – காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை

ஒன்ராறியோ மாகாணத்தில் பாடசாலைகள் தற்காலிகமாக இணையவழிக் கல்விக்கு மாற்றம்

நாயிறு இரவு முதல் திங்கள் மாலை வரை, தென் ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணத்தில் 40 செ.மீ. வரை பனி வீழ்ச்சி காணப்படும் சாத்தியங்கள் உண்டென கனடிய கால அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

நயாகரா, கிங்ஸ்ரன், ஓட்டவா உட்பட்ட தென் ஒன்ராறியோ பிரதேசங்களில் 40 செ.மீ. வரையயிலும் ரொறோண்டோ பெரும்பாகத்தில் 20 செ.மீ. வரையிலும், கியூபெக் மாகாணத்தில் 35 செ.மீ. வரையிலும் பனிபொழிவு இருக்கலாம் என அவதான நிலையம் தெரிவிக்கிறது.

இதுவரை காலமும் கோவிட் தொற்றுக் காரணமாக இணையவழிக் கல்வியைப் போதித்து வந்த பாடசாலைகள் திங்கள் முதல் மீண்டும் நேரடி சமூகக் கல்விக்கு மாற்றப்பட்டிருந்தன எனினும் பல கல்விச் சபைகள் தமது பாடசாலைகளை மீண்டும் தற்காலிக இணையவழிக் கல்விக்கு மாற்றியிருப்பதாக அறிவிக்கபப்டுகிறது.

ஓட்டவா-கார்ள்ட்டன் மாவட்ட கல்விச்சபை மற்றும் ரொறோண்டோ கல்விச்சபை ஆகியன இத் தற்காலிக போதனை பற்றிப் பெற்றோர்களுக்கு அறிவிக்கவிருப்பதாகத் தெரிகிறது.