தென்னாசியாவிலேயே மிகப்பெரிய சினிமாத் திரை -

தென்னாசியாவிலேயே மிகப்பெரிய சினிமாத் திரை

பிரபாஸ் ஷ்ரதா கபூர் நடித்த ‘சஹோ’ முதலாவதாகத் திரையேறுகிறது

கியூப் சினிமாவினால் அறிமுகம் செய்யப்பட்ட தென்னாசியாவிலேயே மிகப் பெரியதென வர்ணிக்கபடும் 100 அடி அகலமும், 80 அடி உயரமுமுள்ள சினிமா திரை ஆந்திரப் பிரதேசத்திலுள்ள சுள்ளூர் பேட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பிரபாஸ், ஷ்ரதா கபூர் – ‘சஹோ’ படத்தில்

கோலாகலமாக நடைபெற்ற திறப்பு விழாவில் பாகுபலி புகழ் பிரபாஸ் மற்றும் ஸ்ரதா கபூர் நடித்த ‘சாஹோ’ (Saaho) ட்ரெயிலர் மற்றும் ‘ சயி ரா’ (Sye Raa) ஆகிய படங்கள் பரீட்சார்த்தமாகக் காட்டப்பட்டன. புகழ் பெற்ற தெலுங்கு நடிகரான ராம் சரண் இவற்றைப் பார்வையிட்டார்.

EPIQ எனப்படும் புதிய தொழில்நுட்பத்தைப் பாவித்து உருவாக்கப்பட்டது இத் திரை. உயர்தர லேசர் ப்ரொஜெக்சன் (laser projection), டொல்பி அட்மோஸ் ஒலி(Dolby Atmos immersive audio), தட்டையான புலன் விகிதம் (flat (1.89) aspect ratio) ஆகிய அம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது இத் திரை.

பிரபாஸ், ஷ்ரதா கபூர் நடித்த ‘சஹோ’ முதல் படமாக இங்கு காண்பிக்கப்படும்

Please follow and like us:
error0