News & AnalysisSri Lanka

துறைமுக நகர சட்டவரைவு – பாராளுமன்ற வாக்களிப்பைத் தள்ளிப்போடும்படி மதத்தலைவர்கள் வற்புறுத்தல்

நெருக்கடிக்குள் அரசாங்கம்?

கொழும்பு துறைமுகநகர சட்டவரைவின் மீதான பாராளுமன்ற வாக்களிப்பைத் தள்ளிப்போடும்படி, கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களைச் செய்வதற்கு அரசு இணங்கிய நிலையில் பாராளுமன்றத்தில் இச் சட்டம் நிறைவேற்றப்படும் என அரச தரப்பில், அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று (19) தெரிவித்திருந்தார். எந்த வகையிலாவது, அவசரம் அவசரமாக இச் சட்டத்தை நிறைவேற்றிவிட அரசு முயற்சிக்கிறது என எதிர்க்கட்சிகளும் குற்றஞ்சாட்டியிருந்தன.

இந்நிலையில், அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிராக தற்போது மதத் தலைவர்களும் குரலெழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்று (19) ஆயர் மல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் இணைந்து, கொழும்பு தர்மயாதனயவில் ஒழுங்குசெய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில், “கோவிட் பெருந்தொற்றினால் எமது மக்கள் மிகவும் குழப்பமடைந்து இருக்கிறார்கள். மக்கள் இப்பிணியோடு போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளை அரசுக்கு ஏன் இந்த அவசரம்? இவிவிடயத்தில் வெளிப்படைத்தன்மை போதாது என நாம் சந்தேகப்படுகிறோம். நாட்டின் வளங்களைப் பிறருக்குத் தானம் செய்வதற்கு முன்னர் மக்களோடு கலந்து ஆலோசிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் நேற்றுத்தான் வாசித்தேன். அதனால்தான் நான் மக்கள் சார்பாகக் கேட்கிறேன், தயவுசெய்து இச்சடமூலத்தின் வாக்கெடுப்பைப் பின்போடும்படி கேட்கிறேன்” எனத் தெரிவித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித்.