துருக்கி-சிரிய பூகம்பம் -சுமார் 4500 பேர் மரணம்

துருக்கியின் தென்கிழக்கு சன்லிஉற்ஃபா மாகாணத்தின் மாகாணத் தலைநகர் கசியான்ரெபிலிருந்து 33 கி.மீ. தொலைவை மையமாக்கொண்டு நடைபெற்ற 7.8 றிக்டர் அளவிலான பூகம்பத்தினால் துருக்கியில் 2,921 பெரும் சிரியாவில் 1,444 பேரும் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் செதிகள் தெரிவிக்கின்றன.

திங்களன்று (05) இரவு மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது நடைபெற்ற இப் பூகம்பத்தைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் 7.6 அளவிலான இரண்டாவது பூகம்பமொன்றும் அங்கு நடைபெற்றிருக்கிறது எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மிகவும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது பணியாளர்கள் காயப்பட்டவர்களையும், இடிபாடுகளில் சிக்கியவர்கலையும் காப்பாற்றி வருவதாகத் தெரியவருகிறது. (Image Credit:

 Global Look Press / Xinhua / Septianjar Muharam)