Spread the love

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டு

கோப்ரா (2020) தமிழ்ப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த ‘தும்பி துள்ளல்’ பாட்டை இரட்டை கீ போர்ட்டில் வாசித்து அசத்திய சிறுமி சஹானா நிரேனுக்கு அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது.

பார்வையை இழந்த சஹானா ‘கோப்ரா’ படத்தில் வெளிவந்த ‘தும்பி துள்ளல்’ பாட்டை இரட்டைக் கீபோர்ட்டில் வாசிக்கும் காணொளியொன்றை அவர் தனது ருவிட்டரில் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன ருவிட்டர் மூலம் தனது வலையமைப்பில் மீளவும் பகிர்ந்திருந்தார்.

கீ போர்ட்டில் மட்டுமல்லாது இனிமையான குரலையும் கொண்ட சஹானாவுக்கு கிடைத்த அங்கீகாரம் தற்போது பல தமிழ்ப்படத் தயாரிப்பாளர்களையும், இசையமைப்பாளர்களையும் சஹானாவை நோக்கிப் படையெடுக்க வைத்துள்ளது.



சஹானாவின் ருவிட்டர் கணக்கைப் பராமரித்துவரும், அவளின் தாயார் இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் தனது ருவீட்டில் ‘sweet’ என ஒரு சொல்லில் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்ததை வைத்தி ” இந்த ஒரு சொல்லே போதும் ஏ.ஆர்.ரஹ்மான் சேர். நாங்கள் எதிர்பார்த்திருந்த அனத நாள் இறுதியாக வந்துவிட்டது. இப் பொன்னான சந்தர்ப்பத்தைத் தந்ததற்காக எங்களது நன்றிகள்” என சஹானாவின் தாயார் பதிலளித்திருக்கிறார்.

இக் காணொளியைப் பார்த்த ‘கோப்ரா’ படத்தின் தயாரிப்பாளர் சஹானாவுக்கு முழுமையான ஒலிப்பதிவுக் கூடமொன்றிற்கான உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். சஹானா, பாடல்களைப் பாடுவது மட்டுமல்லாது, பலவிதமான இசைக் கருவிகளையும் கையாளவல்ல திறமையைக் கொண்டவள் என்பது குறிப்பிடத் தக்கது.

விக்ரம், ஷிறிநிதி செட்டி ஆகியோர் நடித்த இப் படத்தில் ஷ்றேயா கோஷால், நகுல் அபயங்கார் ஆகியோர் ‘தும்பி துள்ளல்’ பாட்டைப் பாடியிருந்தார்கள். அஜாய் ஞானமுத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

Print Friendly, PDF & Email
Related:  பிரபாஸ், தீபிகா இணையும் புதிய படம் | தெற்குநோக்கிப் படையெடுக்கும் பொலிவூட் நடிகைகள்