துப்பறியும் கூகிள்| நீருக்கடியில் உடலைக் கண்டுபிடித்தது!

Spread the love
22 வருடங்களுக்குமுன் நீரில் அமிழ்ந்த வாகனத்தை கூகிளின் விண் கோள் படமெடுத்தது

வில்லியம் மோல்ட்ற் நவம்பர் 7, 1997 இல் காணாமல் போயிருந்தார். ஒரு இரவு ‘கிளப்’ பிற்குப் போனவர் திரும்பவில்லை. அவருக்கு அப்போது நாற்பது வயது. காவல் துறையின் விசாரணை எதுவும் பலனளிக்கவில்லை.

22 வருடங்கள் கடந்த பின்னர், ஆகஸ்ட் 28 அன்று அவருடைய உடல் வெலிங்டனிலுள்ள மூன் பே சேர்க்கிள் என்னுமிடத்திலுள்ள குளம் ஒன்றில் அமிழ்ந்துபோயிருந்த வாகனமொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதைக் கண்டுபிடித்தது ‘கூகிள் மாப்ஸ்’ எனப்படும் படக் கருவி. விண்வெளியில் சதா சுற்றிக்கொண்டிருக்கும் விண் கோளில் இருக்கும் கமராவினால் இப்படம் எடுக்கப்பட்டது.

வாகனத்தை நீருக்கு வெளியே கொண்டுவந்தபோது இறந்தவரின் எலும்புக்கூடு உள்ளே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவாரத்தில் அது வில்லியம் மோல்ட்ற் இன் உடற்கூறு என நிரூபணமானது.

அந்தப் பகுதியில் முன்பு வாழ்ந்த ஒருவர் அப்பிரதேசத்தை கூகிள் மாப் பில் உலாவியபோது நீரில் மூழ்கியிருந்த வாகனத்தைத் தற்செயலாகக் காண நேரிட்டது. அவர் மூன் பே சேர்க்கிளில் வசிக்கும் ஒருவரோடு தொடர்புகொண்டு விபரத்தைத் தெரிவித்தார். அவரும் தனது ‘ட்றோண்’ மூலம் நீரின் மேலாக உலாவி நீரினடியில் வாகனம் இருப்பதை உறுதிசெய்த பின் காவல்துறையினருக்குத் தெரிவித்தார்.


இணைய உலகில் சேமித்துவைக்கப்பட்ட கூகிள் ஏர்த் படங்களில் 2007 முதல் இவ் வாகனம் தெளிவாகத் தெரிகின்றதென்றும் 2019 வரை எவரும் அதுபற்றி அக்கறைப்படவில்லை என்றும் அறிய முடிகிறது.

Google Maps users are able to view what appears to be a car in the pond
மூன் மே சேர்க்கிள் குளம் – வெலிங்டன், புளோறிடா
A Google Maps image of a car in a pond where a missing man's remains were found
குளத்தினடியில் அமிழ்ந்திருக்கும் வாகனம்

வில்லியம் மோல்ட்ற் வாகனக் கட்டுப்பாட்டை இழந்ததால் நீரில் மூழ்கியிருக்கலாம் என பாம் பீச் சிறு நகர் ஷெரிப் நம்புவதாக பீ.பீ.சி. செய்தி வெளியிட்டிருக்கிறது.

படங்கள்: BBC

Print Friendly, PDF & Email
Related:  கோவிட்-19 | முன்னறிவித்தல் தரும் ஸ்மார்ட் எலெக்ட்றோணிக்ஸ்
>/center>