துட்டகைமுனு ஸ்தூபி முன் ஜனாதிபதி ராஜபக்சவின் கொள்கைப் பிரகடனம் -

துட்டகைமுனு ஸ்தூபி முன் ஜனாதிபதி ராஜபக்சவின் கொள்கைப் பிரகடனம்

Spread the love

நவம்பர் 19, 2019

ருவான்வெலிசேய துட்டகைமுனு ஸ்தூபி முன் ஜனாதிபதி ராஜபக்சவின் முதல் உரை

தமிழ் மன்னன் எல்லாளனைத் தோற்கடித்து இலங்கை முழுவதையும் தனது ஆட்சிக்குள் கொண்டுவந்த சிங்கள மன்னன் துட்டகைமுனுவின் ஸ்தூபி அமைந்திருக்கும் வரலாற்று முக்கிய இடத்தில் தனது பதவியேற்பின் முதலாவது உரையை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச.

இவ்வுரையின்போது தனது ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்ற கொள்கைப் பிரகடனத்தையும் அவர் வெளியிட்டார். அவற்றில் முக்கியமானவை:

  • திறமை, வினைத் திறன் முன்னேற்றம், தொழில் நேர்த்திக்கு முதலிடம் கொடுக்கப்படும்
  • ஊழலுக்கு இடமில்லை
  • தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் நிர்வாகம்நடுநிலையைப் பேணும் வெளிவிவகாரக் கொள்கை, சிறீலங்காவின் ஒற்றையாட்சியையும், இறைமையையும் மதிக்கும்படி வெளிநாட்டு அரசுகளை கேட்டுக்கொள்ளல்
  • சிங்கள மக்களின் வாக்குகளுக்காக நன்றி தெரிவிக்கும் அதேவேளை குறைந்த சிறுபான்மை வாக்குகளையிட்டு ஏமாற்றம், இருப்பினும் தான் சகல இலங்கையருக்குமான ஜனாதிபதி என்பதை உறுதி கூறல்
  • சகல குடிமக்களினதும் உரிமைகளைப் பேணும் அதே வேளை சகல மதங்களும், கலாச்சாரங்களும் ஒத்திசைய வாழும் நாடொன்றை உருவாக்குதல்
  • நிறைவேற்று அதிகாரங்களை நாட்டின் நன்மைக்காகப் பயன்படுத்தல்

சிறுபான்மையினருக்கு அவர் விடுத்த செய்தியில், “நான் எதிர்பார்த்த அளவுக்கு உங்களது ஆதரவு எனக்குக் கிடைக்கவில்லை. நீங்கள் எனக்கு வாக்களித்திருக்காவிட்டாலும், புதிய ஜனாதிபதியாக, நாட்டின் எதிர்கால நன்மையை முன்னிட்டு என்னுடன் இணைந்து பயணியுங்கள் என்று கேட்ட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

அவர் தனது கன்னி உரையை நிகழ்த்திய இடம் குறியீட்டு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இங்குதான் சோழ மன்னனான எல்லாளனைச் சிங்கள மன்னன் துட்ட கைமுனுவின் ஸ்தூபி இருக்கிறது. எல்லாளனின் வீழ்ச்சிக்குப் பிறகுதான் இலங்கை முழுவதும் சிங்கள மன்னரின் ஆட்சிக்குள் கொண்டுவரப்படுகிறது.

இவ்வுரையை இவ்விடத்தில் நடத்தியதன் மூலம், துட்டகைமுனுவைப் போலவே, தனியே சிங்கள மக்களின் ஆதரவுடன் மட்டும் ஆட்சியைப் பிடிக்க ஒரு சிங்களவரால் முடியும் என்பதை வலியுறுத்துவதன் மூலம், இந் நாடு சிங்கள மக்களுக்கே உரியது எனவும், அதே வேளை சிறுபான்மையினர் விரும்பினால் இந் நாட்டில் வாழலாம் என்னும் செய்தியைக் கூறுவதாகவும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ராஜபக்ச.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *