தீர்மானங்களை நிறைவேற்ற ஐ.நா. அழுத்தம் கொடுக்கவேண்டும் – தமிழரசுக் கட்சி

Spread the love

பெப்ரவரி 24, 2020

ஐ.நா. தீமானங்களை நிறைவேற்றப் போவதில்லை என இலங்கை அரசு அறிவித்துவிட்ட போதிலும், அவற்றை நிறைவேற்ற வேண்டுமென ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தொடர்ந்தும் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

கிளிநொச்சியிலுள்ள அறிவகம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

“இணைப் பிரேரணையாளர் நிலையிலிருந்து இலங்கை தன்னை மீளப்பெற்றுக்கொள்ளும் என்பது நன்றாகத் தெரிந்திருந்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் நாம் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் அவதானித்து வந்திருந்தோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் நிறைவேற்றிய தீர்மானத்தை இலங்கை மீறுவதைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அத் தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்கத் தாம் வேறு அணுகுமுறைகளைக் கையாளத் தாம் தீமானித்துள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி எடுத்த தீர்மானங்களை அதன் பங்காளிக் கட்சிகளுக்குத் தெரிவிக்கவுள்ளதாகவும் அதே வேளை வருகின்ற பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாகக் கட்சி சில ஆரம்ப முடிவுகளை எட்டியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் விடயத்தில், இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் இத் தேர்தலில் போட்டியிடுவார் எனவும் அதே வேளை, படித்த இளையவர்களுக்கும், பெண்களுக்கும் சந்தர்ப்பங்கள் வழங்குவது பற்றிக் கவனமெடுக்கப்படும் எனவும் எவ்வளவுதான் அதிக பெண்களை அரசியலுக்குள் கொண்டுவரத் தாம் முயற்சிகளை எடுத்தாலும் நிலைமை முன்னேறுவது போலத் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Related:  தெல்லிப்பழை மஹாஜன கல்லூரியின் ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் த.பூ.முருகையா காலமானார்

Leave a Reply

>/center>