NewsSri Lanka

‘தி ஹிந்து’ மாநாட்டில் கலந்து கொள்ள மஹிந்த இந்தியா பயணம்

பெப்ரவரி 08, 2018

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நாளை, பெப்ரவரி 9ம் திகதி இந்தியா பயணமாகிறார். 9ம் 10ம் திகதிகளில் பெங்களூரில் நடக்கவிருக்கும் ‘தி ஹிந்து’ நாளிதளால் ஒழுங்கு செய்யப்பட்ட மாநாடொன்றில் கலந்து கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். இம்மாநாட்டின் ஆரம்பப் பேச்சாளராக ராஜபக்ச கெள்ரவம் பெறுறுகிறார்.

அவரது பேச்சு எதிர்கால இந்திய – சிறீலங்க உறவு பற்றியதாகவே இருக்கும் என அறியப்படுகிறது. இரண்டாவது நாள் நடைபெறும் நிகழ்வில் இந்தியாவின் உதவி ஜனாதிபதி வெங்கையா நாயுடு முக்கிய பேச்சாளராக இருப்பார். முன்னாள் இந்திய உதவி ஜனாதிபதி, முன்னாள் ஆப்கானிஸ்தானிய ஜனாதிபதி ஹமிட் அன்சாரி, முன்னாள் மாலைதீவு ஜனாதிபதி மொஹாமெட் நஷீத், முன்னாள் பிரபல கிரிக்கட் ஆட்டக்காரர் சச்சின் ரெண்டுல்கார் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த கரன் ஜோஹர், திருமதி பத்மா லக்ஷ்மி போன்றவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற இது போன்ற மானாடுகளில் பங்குபற்றியிருந்தார்கள்.

மாநாட்டில் கலந்துகொள்ளும் முக்கியஸ்தர்களை மஹிந்த ராஜபக்ச சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ராஜபக்சவுடன் சிறீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் லோஹன் றத்வத்த, டிலான் பெரேரா, நாமல் ராஜபக்ச, டலஸ் அழகப்பெருமா ஆகியோரும் இப் பயணத்தில் கலந்துகொள்கின்றனர்.