திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்து தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சி !
திருச்சி மத்திய சிறை, சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளில் 15 பேருக்கு மேல் தற்கொலை முயற்சிகளில் ஈடுபாட்டனர் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.
தம்மை விடுதலை செய்யும்படி முன்வைத்த கோரிக்கைகள் பலனளிக்காமையால் இன்று அவர்களில் பலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டனரெனத் தெரிகிறது.
சிலர் அளவுக்கதிகமான துக்க மாத்திரைகளை விழுங்கியும், சிலர் தமது வயிறுகளைக் கிழித்துக்கொண்டும் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டதாக அறிவிக்கப்படுகிறது.
இவர்களில் பலர் நீண்டகாலமாக இம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும், பலர் தம்மீது போய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன எனக் கூறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது 60 இருக்கும் மேற்பட்ட கைதிகள் மத்திய சிறையிலும், 100 ம் மேற்பட்டவர்கள் சிறப்பு முகாமிலும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். பங்களாதேஷ், சூடான், நைஜீரியா, பல்கேரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கு சிறைவைக்கப்பட்டுள்ளார்கள்
(மூலம்: தமிழ் கார்டியன்)