திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் சார்ஜெண்டினால் சுட்டுக் கொலை!



திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்த மூன்று பொலிஸ் அதிகாரிகளை அதே நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் சுட்டுக்கொன்றுள்ளார். இன்றிரவு (24) நடைபெற்ற இச்சம்பவத்தின்போது நிலையப் பொறுப்பதிகாரியுட்பட இன்னுமொருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் இருவரும் தற்போது கல்முனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரான பொலிஸ் சார்ஜண்ட், இரண்டு துப்பாக்கிகளுடனும் வெடிமருந்துகளுடனும், திருக்கோவிலிலிருந்து 80 கி.மீ. தூரத்திலுள்ள ஆதிமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக அறியப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.