திருகோணமலையில் இலங்கை விமானப்படைக்கு ரூ.250 மில்லியன் செலவில் கூடரங்கு
திருகோணமலை, சீனன்குடாவில் இலங்கை விமானப்படையின் பாவனைக்காக ரூ.250 மில்லியன் செலவில் கூடரங்கு (auditorium) ஒன்றை அமைத்துக் கொடுக்க இந்திய கடற்படை முன்வந்துள்ளது. இந்திய விமானப்படைத் தளபதி விவேக் ராம் செளத்திரியின் நான்கு நாள் வருகையின்போது இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெறவுள்ளதாக அறியப்படுகிறது.
இலங்கை விமானப்படைத் தளபதி சுதர்சனாவில் நாளை (மே 01) இலங்கை வரும் செளத்திரி ஜனாதிபதி விக்கிரமசிங்க உட்பட பல பாதுகாப்பு அதிகாரிகளையும் கொழும்பில் சந்திக்கவுள்ளார்.
பிராந்திய கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி, தொழில்நுட்பப் பகிர்வு போன்றவை பற்றி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகவே இந்திய தளபதி இங்கு வரவுள்ளதாகவும் அவரது வருகையின்போது விமானப்படையின் விமானங்களுக்குத் தேவையான உதிரிப்பாகங்களை அன்பளிக்கவுள்ளதாகவும் இலங்கை கடற்படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையின் பல பயிற்சிக்கூடங்களையும் பார்வையிடவுள்ள தளபதி செளத்திரி மிக்-21, மிக்-23, மிக்-29 போன்ற பல விமானங்களை ஓட்டிய அனுபவஸ்தர் எனவும் சிறந்த கல்விமான் எனவும் அறியப்பட்டவர். (Image Credit: Wikipedia)