தாமிரபரணி நாகரிகம் 3200 வருட பழமை வாய்ந்தது – கார்பன் கால நிர்ணயம் உறுதி செய்தது
தமிழ்நாட்டின் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3,200 வருட தொன்மையானது என கார்பன் கால நிர்ணயம் உறுதிசெய்துள்ளது.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவகலை என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட புதையல் மண்கலத்தில் காணப்பட்ட மண் மற்றும் அரிசி ஆகியவற்றின்மீது அமெரிக்காவிலுள்ள மயாமி , பேற்றா ரெஸ்ரிங் ஆய்வுகூடம் செய்த பகுப்பாய்வின் விளைவாக அவற்றின் தொன்மை, கி.மு. 1155, அதாவது 3,200 ஆண்டுகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள அதிக தொன்மையான தடயங்கள் இதுவே எனக் கூறப்படுகிறது.

இதன் விளைவாக, தாமிரபரணிப் படுகையில் கண்டெடுக்கப்பட்ட தடயங்களைக் காட்சிப்படுத்துவதற்காக, திருநெல்வேலியில் ஒரு தொல்பொருட் காட்சியகம் ஒன்றை நிறுவுவதற்கு 15 கோடு ரூபாக்களை ஒதுக்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். (தி நியூஸ் மினிட்)