LIFEWorld

தாதிக்கும் மருத்துவருக்கும் மருத்துவமனையில் கல்யாணம்!!

கடமை தொடர்ந்தது கல்யாணம் வாழ்க!

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் அன்னலன் நவரத்தினமும் வட அயர்லாந்தைச் சேர்ந்த, தாதி ஜான் ரிப்பிங்கும் இருவரும் பணிபுரியும் லண்டன் செயிண்ட் தோமஸ் மருத்துவமனையிலுள்ள தேவாலயத்தில் கொறோனாவின் ஆசியுடன் திருமணம் செய்துகொண்டனர்.

இவ்விருவரும் இதே மருத்துவமனையில் பணிபுரிந்து வனதவர்கள் எனவும், கோவிட்-19 தீவிரத்தால் இவர்கள் தமது திருமணத்தை ஒத்திப்போட்டுவிட்டுக் கடமையில் மும்முரமாக இருந்தனர் எனவும் தற்போது நிலைமைகள் முன்னேறியதும் ஆடம்பரமேதுலில்லாது இதர பணியாளர்களின் ஆசியுடன் அதே மருத்துவமனைத் தேவாலயத்தில் தமது திருமணத்தை முடித்துவைத்துள்ளனரெனவும் அறிய முடிகிறது.

நணபர்களும், உறவினர்களும் தேவாலயச் சடங்குகளைக் காணொளி மூலம் பார்க்கும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

எதிர்வரும் ஆகஸ்ட் நடைபெறவிருந்த இத் திருமணத்த்திற்கு இலங்கையிலிருந்தும், அயர்லாந்திலிருந்தும் உறவினர் வந்து கலந்துகொள்ளத் தற்போதுள்ள கோவிட்-19 நெருக்கடிகள் ஒத்துழைக்க முடியாமல் போகலாம் என்பதற்காக, இருவரும் தமது திருமணத்தைத் தற்போது செய்துகொணடதாகத் தெரிவித்துள்ளனர்.

“This is lovely” என பிரித்தானியாவின் சுகாதார அமைச்சர் மற் ஹன்னொக், இத் திருமணம் தொடர்பாகத் தனது ருவீட்டர் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.