Spread the love

தளபதி விஜய் பெயரில் கட்சி பதியப்பட்டுள்ளதாக அப்பா சந்திரசேகர் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கைக்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லை என நடிகர் விஜய் அறிவித்திருக்கிறார்.

தளபதி விஜய் பெயரில் தந்தை சந்திரசேகர் கட்சி பதிவு - தனக்குத் தொடர்பில்லையென விஜய் மறுப்பு! 1
தளபதி விஜய்

‘அகில இந்திய தஅபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியொன்று பதிவு செய்யப்படிருப்பதாக இன்று தந்தை சந்திரசேகர் புதிய தலைமுறை செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி வழங்கியிருந்தார்.

“இது விஜயின் கட்சியல்ல. அவர் அரசியலில் ஈடுபடுவாரா இல்லையா என்பதை என்னால் கூறமுடியாது. நான் கட்சியைப் பதிவு செய்திருக்கிறேன்” எனச் சந்திரசேகர் கூறியிருந்தார்

“1993 இல் ஆரம்பிக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றம் ‘அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் தொண்டரமைப்பாகப் பதியப்பட்டுச் சேவையாற்றி வருகின்றது.விஜயின் பெயரில் பல இளைஞர்கள் பல ந்ற்பணிகளைச் செய்து வருகிறார்கள். அவர்களின் பணிகள் கெளரவப்படுத்தப்பட வேண்டுமென்பதற்காகவே இந்த முயற்சி” என அவர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியொன்றின்போது கூறியிருந்தார்.

விஜய் அரசியலில் குதிக்கலாம் என்பதற்கு ஆதாரமாக மேர்சல், சர்க்கார் போன்ற அவரது சமீபத்திய படங்களும், நாட்டின் ஜி.எஸ்.டி வரி, சுகாதார சேவைகளில் குறைபாடு, நாணைய மதிப்பு, ஜல்லிக்கட்டு, நீட் போன்ற விடயங்களில் அவர் வெளிப்படுத்தி வரும் கருத்துக்களும் ரசிகர்களின் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் சந்தேகங்களைக் கிளப்பி வந்திருந்தன.

ஆனாலும், தந்தையின் அறிவிப்பு வந்தி சில நிமிடங்களில் நடிகர் விஜய், அரசியலில் குதிக்கும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் தந்தையின் அறிக்கைக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். அத்தோடு, தந்தையார் ஆரம்பித்துள்ள கட்சியில் சேரவேண்டாமென்று தனது ரசிகர்களையும் அவர் கேட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email