தலைவர் பதவி வேண்டாம் | ராகுல் காந்தி உறுதி!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியைச் சந்தித்ததிலிருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் வேண்டுமெனச் சில அங்கத்தவர்கள் விரும்புவதாகச் செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில் தனக்கு அப்பதவி வேண்டாமெனவும் அதற்கு இன்னொருவரை நியமிக்க்கும் பட்சத்தில் தான் அதில தலையிடப் போவதில்லை எனவும் ராகுல் காந்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியாக 80 இருக்கைகளையும், தனியாக 52 இருக்கைகளையும் பெற்றது. அதே வேளை பா.ஜ.க. கூட்டணியாக 350 இருக்கைகளையும், தனியாக 303 இருக்கைகளையும் பெற்றது.  இதனால் மக்களவையில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி நிலையைக்கூடத் தக்கவைக்க முடியாத நிலையில் (இதற்கு குறைந்தது 54 இருக்கைகள் வேண்டும்) காங்கிரஸ் அவமானப்பட்டுப் போய் இருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் பெற்ற படுதோல்வியைத் தொடர்ந்து பல மானில காங்கிரஸ் தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் தமது பதவிகளிலிருந்து விலகிக் கொண்டனர். ராகுல் காந்தியும் தான் தனது தலைவர் பதவியைத் துறப்பதாக அறிவித்தார். ஆனால் கசியின் மூத்த தலைவர்கள் அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்க மறுத்துவிட்டார்கள். ஆனாலும் ராகுல் காந்தி தனது முடிவில் மிகவும் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. அத்தோடு கட்சியின் தலைவராக யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதிலும் தான் தலையிடப் போவதில்லை எனப்தில் மிகவும் உறுதியாக உள்ளதாகவும் தெரிகிறது.

Video Credit: youtube/oneindia-tamil