India

தமிழ் மொழியை நான் மதிக்கிறேன்-ராஹுல் காந்தி

தமிழ் மொழியைத் தான் மதிப்பதாகவும் அதைக் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஹுல் காந்தி தெரிவித்துள்ளார்.

“வளர்ச்சியைத் துரிதப்படுத்த நாட்டு மக்களையும் கலாச்சாரங்களையும் ஒன்றாக மாற்றிவிட வேண்டுமென்று ஆளும் கட்சி நம்புகின்றது. எங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு இந்தியா என்றால், இந்தியாவும் தமிழ்நாடு தான். நான் தமிழ் மொழியை மதிக்கிறேன்; அதைக் கற்றுக்கொள்ளவும் விரும்புகிறேன்” என ஜனவரி 23 அன்று கோயம்புத்தூரில் நுண், சிறிய, மத்திய தொழில் நிறுவனங்களின் (Micro, Small and Medium Enterprises (MSME)) பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியபோது ராஹுல் காந்தி தெரிவித்தார். காந்தி தமிழ்நாட்டுக்கு மூன்றுநாள் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/i-respect-tamil-language-might-learn-it-also-rahul-gandhi/videoshow/80422955.cms