Sri Lanka

தமிழ் முன்னேற்றக் கூட்டமைப்பு வட-கிழக்கிலும் போட்டியிடும் – மனோ கணேசன்

ஜனவரி 3, 2020

மனோ கணேசன்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முன்னேற்றக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களில் வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக அதந் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன், சிங்கள தினப்பத்திரிகையான லங்காதீபவுக்கு அளித்த பேட்டியில், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவே தாம் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இத் தேர்தலில் தாம் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியாகப் போட்டியிடுவதா என்பது பற்றித் தாம் இன்னும் முடிவு எடுக்கவில்லையென்றும் இனி வருங்காலத்தில் தாம் அதை மேற்கொள்வோமென்றும் அவர் தெரிவித்தார்.

வே.இராதாகிரிஷ்ணன்
ப.திஹாம்பரம்

தமிழ் முன்னேற்றக் கூட்டமைப்பில், மேற்கு மாகாணத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும், மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி (Democratic People’s Front), திகாம்பரத்தின் தலைமையிலான தேசிய தொழிலாளர் சங்கம் (National Union of Workers), தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், வீ.இராதாகிருஷ்ணனின் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி (Upcountry People’s Front) ஆகியன அங்கம் வகிக்கின்றன.