News & AnalysisSri Lanka

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், நீர்ப்பாசன அமைச்சர் சாமல் ராஜபக்ச சந்திப்பு

மஹாவலி நிர்வாகம் காணி சுவீகரிப்பு தொடர்பாகப் பேச்சுவார்த்தை

வடமாகாண மக்களுக்குச் சொந்தமான தனிப்பட்ட நிலங்களை மஹாவலி நிர்வாகம் சுவீகரிப்பது தொடர்பாக, நீர்ப்பாசன சேவைகள் அமைச்சர் சாமல் ராஜபக்சவைத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று (06) சந்தித்திருந்தது.

இச் சந்திப்பைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட பா.உ. எஸ்.சிறிதரன் கருத்துத் தெரிவிக்கையில் “அமைச்சருக்கும் தமிழர் பிரதிநிதிகளுக்குமிடையேயான பேச்சுவார்த்தை மிகவும் பிரயோசனமாகவும், நம்பிக்கை தருவதாகவும் அமைந்திருந்தது” எனக் கூறியிருக்கிறார்.

“மஹாவலி நிர்வாக அதிகாரிகளது நடவடிக்கைகள் கூறித்து நாங்கள் அமைச்சருக்கு எடுத்துக்கூறியதும் அவர் அதை உடனேயே நிறுத்திவிட்டார். அத்தோடு, எங்கள் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அவரது இந் நடவடிக்கைகள் போற்றப்படவேண்டியவை. இவ்விடயத்தை அவர் கைக்கொண்ட முறை குறித்து நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம்” எனப் பா.உ. சிறிதரன் தெரிவித்தார்.

வடக்கு கல்முனை உப-செயலகப் பிரிவை முழுச் செயலக அந்தஸ்துக்கு மாற்றும்படி நாம் விடுத்த கோரிக்கையையும் அவர் மிகவும் சாதகமாகப் பரிசீலிப்பாதாக வாக்குறுதியளித்துள்ளார் என தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.கல்முனை உப- செயலகப் பிரிவுகளிடையே பிணக்குகள் தோன்றுவதானல் கல்முனை வாசிகள் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருவதாக பா.உ. சிறிதரன் தெரிவித்தார்.

இச் சந்திப்பின்போது, த.தே.கூ. பா.உ.க்கள் சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன்; த.தே.ம.முன்னணியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன்; தமி மக்கள் தேசிய கூட்டணியைச் சேர்ந்த சீ.வீ.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (தி ஐலண்ட்)