Art & LiteratureIndia

தமிழ் ஒரு இனிமையான மொழி, அதைக் கற்காதது குறித்து வருத்தமடைகிறேன் – பிரதமர் மோடி

தமிழ் மொழியைக் கற்காதமை குறித்து தான் வருத்தமடைவதாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தனது ‘மான் கி பாட்’ வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

‘மான் கி பாட்’ என்ற பெயரில் பிரதமர் மோடி, மாதந்தோறும் வானொலி நிகழ்ச்சியொன்றை வழங்கி வருகிறார். ஞாயிறன்று (நேற்று) ந்டைபெற்ற நிகழ்ச்சியின்போது ஐதராபாத்தைச் சேர்ந்த அபர்ணா ரெட்டி அவர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போது தமிழைக் கற்காது விட்டது குறித்துத் தான் கவலை கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் மிக நீண்டகாலமாகப் பிரதமராக இருக்கிறீர்கள். இக்காலத்தில் நீங்கள் செய்யவில்லிஅயே என்று கவலைப்படும் விடயம் என்று எதைக் கூறுவீர்கள்” என அபர்ணா ரெட்டி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“அபர்ணாஜியின் கேள்வி இலகுவானதும் அதே வேளை கிகக் கடுமையானதுமாக இருந்தது. உலகின் மிகவும் தொன்மையான இந்த மொழியை நான் கற்கவில்லை என்பது மிகவும் வருத்தம் தரும் விடயம். அது ஒரு மிகவும் அழகிய மொழி. உலகம் முழுவதும் பிரபலமான அம்மொழியில் உள்ள இலக்கியங்கள், பாடல்கள் பற்றிப் பலரும் என்னிடம் வியந்து கூறியிருக்கிறார்கள். இந்தியா பல மொழிகளின் தாய் நிலம். அது எமது கலச்சாரத்தையும், பெருமையையும் பறைசாற்றுகிறது” என அவர் தனது நிகழ்ச்சியின்போது தெரிவித்தார்.