தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பு மிரட்டல்கள்! -

தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பு மிரட்டல்கள்!

Spread the love
தொலைபேசியிலும், ஈமெயிலினாலும் மிரட்டல் விடப்பட்டது

நவம்பர் 28, 2019

Tamil Nadu police, Bomb threat in Tamil Nadu, Bomb Threat to DMK office, Bomb threat to Temples, Crime in Tamil Nadu, Tamil Nadu law and order, Bomb Hoax
குண்டு வெடிப்பு எச்சரிக்கைகளை அடுத்துத் தேடுதல் நடத்தும் த்மிழக காவற்துறை

மதுரை மீனாட்சியம்மன் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் குண்டு வெடிப்பு நிகழவிருக்கிறது என ஈ-மெயில் மூலம் எச்சரிக்கை விடப்பட்டதையடுத்து தமிழகக் காவற்துறை தமது தேடுதல்களை மும்முரப்படுத்தியுள்ளனர்.

இவ்விடங்களில் வெடி குண்டுகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் வெடிக்குமெனவும் தகவலைக் கொண்ட ஈ-மெயில் காவற்துறைத் தலைமையகத்துக்கு இனம்தெரியாதோரால் அனுப்பட்டிருந்தது.

இதனையடுத்து இவ்விடங்களில் வெடிகுண்டுத் தடுப்பு அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து கொடைக்கானலிலுள்ள அகில இந்திய வானொலி அலுவலகத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

இது நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சென்னை காவற்துறை கட்டளைத் தலைமையகத்துக்கு வந்த தொலைபேசியழைப்பின் மூலம் அண்ணா அறிவாலயத்துக்குள் வெடிகுண்டு பொருத்தப்பட்டதாக எச்சரித்ததையடுத்து அங்கும் காவற்துறை சோதனையை மேற்கொண்டது. அவ்வெச்சரிக்கையைச் செய்தவர் இந்தி மொழியில் பேசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எந்தவொரு இடங்களிலும் குண்டுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. காவற்துறை விசாரணைகளைத் தொடர்கின்றது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  பெரியார் விவகாரம் | மன்னிப்புக் கேட்க ரஜனிகாந்த் மறுப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *