India

தமிழ்நாட்டில் இன்னுமொருவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்!

ஜூன் 29, 2020: தமிழ்நாட்டில் இன்று மரணமடைத்த 25 வயதுடைய குமரேசன் என்ற இளைஞர், பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்தபோது தாக்கப்பட்டாரெனச் சந்தேகிக்கப்படுகிறது.

மரணமடைந்த குமரேசன் என்பவருடைய சிறுநீரகங்களும், மண்ணீரலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததென மருத்துவமனைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

தென்காசியைச் சேர்ந்த ஆட்டோ சாரதியான 25 வயதுடைய குமரேசன் மே மாதம் 10 ம் திகதி வீகே புதூர் பொலிஸ்நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது தாக்கப்பட்டிருக்கலாமெனவும், கடந்த நாற்பது நாட்களாக சுகவீனமுற்றிருந்த அவர் கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் எனவும் ஆனாலும் சிகிச்சை பலனளிக்காது சனியன்று காலாமானார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“இரண்டு வாரங்களுக்கு முன்னரே குமரேசன் தான் பொலிஸ் நிலையத்தில் இரண்டு பொலிஸ்காரர்களால் தாக்கப்பட்ட விடயம்பற்றிக் கூறியிருந்ததாக, குமரேசனின் தந்தையார் நவநீதகிரிஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.மருத்துவமனை அனுமதி அறிக்கையில், குமரேசனின் உடல்நிலை மிக மோசமானதாக இருந்ததென்றும், இரண்டு நாட்களாக அவர் இரத்தமாக வாந்தியெடுத்துக்கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 18 அன்று, வீகே புதூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் கான்ஸ்டபிள் குமார் ஆகியோர் மீது குமரேசனின் குடும்பம் வழக்குப் பதிந்துள்ளதெனவும் ஆனால் குமரேசனின் மரணத்திற்குப் பின்னரே, ஜூன் 28 அன்று, முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவுசெய்யப்பட்டுள்ளதெனவும் அறியப்படுகிறது.

குமரேசனின் தந்தையார் நனநீதகிருஷ்ணன் ஊடகங்களுக்குத் தெரிவித்தன்படி, மே மாதம் 8 ம் திகதி, காணிப் பிரச்சினை ஒன்றின் காரணமாக, தந்தையையும் மகனையும் பொலிசார் கைதுசெய்திருந்தனர் எனவும், பொலிஸ் ஸ்டேசனில் வைத்து தனது மகனைப் பொலிசார் குண்டாந்தடியால் தாக்கினர் எனவும் அவரை விடுதலை செய்வதென்றால் தமக்கு ‘ஆதார் மட்டை’ விபரங்களும் (அடையாள அட்டை) கடிதமொன்றும் தேவை என்று பொலிசார் கூறியதால் அதை நான் எழுதிக் கொடுத்துவிட்டு மகனை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

மறு நாள், பொலிசார் குமரேசனை அவரது நண்பர்களுடன் ஆட்டோ தரிப்பு நிலையத்தில் கண்டபோது அவர்களிடையே வாக்குவாத்ம் மூண்டதாகக் கூறப்படுகிறது.

“குமரேசனும் நண்பர்களும் கதைத்துக்கொண்டிருந்தபோது பொலிஸ் ஏதோ கூறியதைத் தொடர்ந்து இரு பகுதியினருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதெனவும், ஆத்திரமடைந்த பொலிசார் குமரேசனது 17,000 ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியைப் பறித்துக்கொண்டு சென்றுவிட்டதாகவும், அதைப் பெற வேண்டுமானால் மறுநாள், மே 10, காலை 11:00 மணிக்கு குமரேசன் பொலிஸ்நிலையத்துக்கு வரவேண்டுமெனவும் பொலிஸ் கூறிச் சென்றதாக நவநீதகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.மறுநாள் பொலிநிலையம் சென்ற குமரேசனை, சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனும், கான்ஸ்டபிள் குமாரும் தமது குண்டாந்தடிகளால் (லத்தி) குமரேசனை மிக மோசமாகத் தாக்கினர் எனவும், அவரது விலா எலும்புகளில் அடித்த பின்னர் அவரை நிலத்தில் கிடத்தி அவர்மீது ஏறி நின்றனர் எனவும் நவநீதகிருஷ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

குமரேசன், அவரது பிரத்தியேஅக் உறுப்புக்கள், அடி வயிறு, பின்பகுதி ஆகியவற்றில் மிக மோசமாகத்தாக்கப்பட்டுள்ளார் என அவரது மாமனர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இச் சம்பவம் பற்றி குமரேசன் எவரிடமும் பேசவில்லை எனவும் அவரது உடல்நிலை மிக மோசமாக இருந்தது எனவும் தந்தையார் தெரிவிக்கிறார்.

ஒரு மாதத்தின் பின்னர், குமரேசன் இரத்தமாக வாந்தி எடுக்கத் தொடங்கியபோது வீ.கே புதூரிலுள்ள பொது மருத்துவ நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், முன்னேற்றம் காணாததால், ஜூன் 12 அவர் திருநெல்வேலியிலுள்ள அரசாங்க மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் அப்போதுதான், இச் சம்பவம் பற்றி எவரோடும் பேசக்கூடாது எனப் பொலிஸ் மிரடியது பற்றிக் குமரேசன் தெரிவித்ததாகவும் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜூன் 27, சனிக்கிழமை மாலை 8 மணிக்கு குமரேசன் மரணமானார்.சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், கான்ஸ்டபிள் குமார் ஆகியோர் மீது, குமரேசனின் மரணம் தொடர்பான சந்தேகத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக, தென்காசி மாவட்ட பொலிஸ் சுபெறின்ரெண்டென்ற் சுகுணசிங்கிற்கு ஜூன் 18 அன்று பதிவுசெய்யப்பட்ட தபால் மூலம் முறைப்பாடும், முதலமைச்சர், மனித உரிமைகள் ஆணையம் (ஜூன் 19), மாட்ட கலெக்டர் (ஜூன் 22) ஆகியோருக்குக் கடிதங்களும் அனுப்பப்பட்டன எனவும் எவரிடமிருந்தும் ஒரு பதில்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் குமரேசன் குடும்பம் தெரிவித்துள்ளது.