Sri Lanka

தமிழ்நாட்டிலுள்ள அகதிகள் ஈழம் திரும்பவேண்டும்- வடமாகாண ஆளுனர்

தமிழ்நாட்டில் தங்கியுள்ள தமிழ் அகதிகளை ஈழத்திற்குத் திரும்பி வரும்படி வட மாகாண ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகம் அழைப்பு விடுத்துள்ளார். அவர்கள் திரும்பிவரும் பட்சத்தில் காணிகளும், வீட்டு வசதிகளும் வாழ்வாதார வசதிகளும் செய்துகொடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கான இலங்கையின் முன்னாள் தலைவரான சஞ்சிதா சத்தியமூர்த்தி அவர்களை ஆளுனர் அலுவலகத்தில் சந்தித்தபோது அவர் இவ்வேண்டுகோளை விடுத்தார்.

வட மாகாண மக்களுக்கு ஐ.நா. மனித உரிமைகள் சபை முன்னர் அளித்த உதவிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன் தமிழ்நாட்டிலிருந்து அகதிகளை வரவழைப்பதில் மீண்டும் அதற்கொரு பங்கிருக்கிறது என்பதை ஆளுனர் இச்சந்திப்பின்போது வலியுறுத்தியிருந்தார். வடக்கின் அபிவிருத்தியிலும் நல்லிணக்க முயற்சிகளிலும் ஆளுனர் கவனம் செலுத்தி வந்தாலும் தமிழர்கள் ஆபத்தான கடற் பயணங்களை மேற்கொண்டு தொடர்ந்தும் தமிழர் வட-கிழக்கிலிருந்து தப்பியோட முயற்சிப்பது குறித்து தனது கரிசனையை அவர் வெளிப்படுத்தினார்.


பொருளாதாரச் சீரழிவு மற்றும் வட-கிழக்கின் தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறை ஆகிய காரணங்களினால் கடந்த சில வருடங்களாகப் பல குடும்பங்கள் மிகுந்த சிரமங்கள் மத்தியில் கடல் மூலமாக ராமேஸ்வரம் கடற்கரையை அடைந்திருக்கின்றனர். (Source & Image: Tamil Guardian)