தமிழ்நாடு | 85 வயதில் நீச்சல் பழக்கும் தமிழ் நங்கை
வாழ்வு
தமிழ்நாடு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலுள்ள வெண்ணாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த 85 வயதுடைய தமிழ் மூதாட்டி இப்போது உலகப் பிரசித்தி பெற்றவராகிவிட்டார். எல்லாம் அவரது நீச்சல் கலையினால் தான்.
தினக்கூலி செய்து பிழைத்துவரும் பாப்பா என்னும் இம்மூதாட்டி தான் 5 வயதாகவிருக்கும்போது தந்தை கற்றுத்தந்த இக் கலையை இப்போது 5 வயது முதல் 40 வயதானவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். ஆழமான கிணறு முதல் ஆறுகள் வரை மிகவும் இலகுவான முறையில், பலவிதமான நீச்சல் முறைகளை அவர் கற்றுக்கொடுக்கிறார்.
ஆரம்பத்தில் தனது மகன், மகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என்று பலருக்கும் கற்றுக்கொடுத்த பாப்பாவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள இப்போது பலர் முண்டியடிக்கிறார்கள். அவரால் அவரது கிராமம் இப்போது பட்டி தொட்டியெங்கும் அறியப்பட்ட ஒன்றாகிவிட்டது.

“Free style, side stroke, back stroke எனப் பல நீச்சல் வகைகளையும் இலகுவாகக் கையாளக்கூடியவர் எனது அம்மா. அவரால் ஊக்குவிக்கப்பட்ட பலர் நீந்தக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்” எனப் பெருமையுடன் கூறுகிறார் பாப்பாவின் மகன். (தி நியூஸ் மினிட்)