தமிழ்நாடு | ஆதிச்சநல்லூர், கொடுமணலில் 6வது கட்ட அகழ்வு விரைவில் ஆரம்பம்

Spread the love
கி.மு. 1500 ஆண்டளவில் சிந்துவெளி மக்கள் வைகைக் கரையில் குடியேறியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

தமிழ்நாடு: மார்ச் 19, 2020

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூர், சிவகாலை ஆகிய இடங்களிலும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கொடுமணல் என்ற இடத்திலும், அகழ்வுகளை ஆரம்பிப்பதற்குத் தமிழக அரசு தயார் செய்து வருகிறது. இது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் ஆறாம் கட்ட அகழ்வாகும்.

கடந்த ஞாயிறு அன்று கீழடி அகழ்வு நிலங்களைப் பார்வையிட்ட பின்னர், தமிழ்நாடு கலாச்சாரம் மற்றும் தொல்பொருள் அமைச்சர் பாணிடியராஜன் அவர்கள், மணலூரிலும் விரைவில் அக்ழவுகள் ஆரம்பிக்கப்படுமென ஊடகவியலாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

அத்தோடு, அகரம், மணலூர் கிராமங்களில் தொல்குடி மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்திருப்பதாகவும், அவ்வகழ்வுப் பணிகளில் சுமார் 150-160 பேர் ஏற்கெனவே வேலை செய்கிறார்களெனவும், கடந்த மாதம் இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அகரம் மற்றும் மணலூரிலிருந்து 6 தாழிகள் முழுமையான வடிவத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



அதே வேளை, கீழடியில் 12.21 கோடி ரூபா செலவில் அரசு தொல்பொருட் காட்சியகமொன்றை ஆரம்பிக்கவிருக்கிறதெனவும் அப் பணிகள் ஜனவரி 2021 இல் நிறைவுபெறுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இம் மூன்று மாடிக்க் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் அடுத்த மாதமளவில் நடைபெறவிருக்கிறது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 15,000 தொல் பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்படும்.

தமிழ்நாடு அகழ்வுகளின் ஐந்தாம் கட்ட வேலைகள் அக்டோபர் 2019 இல் நிறைவுக்கு வந்த இவ்வகழ்வுகளின்போது, சுமார் 900 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. வெளியிடப்பட்டிருக்கும் ஐந்தாம் கட்ட அகழ்வுகள் மீதான அறிக்கையின் பிரகாரம், சிந்துவெளி நாகரீகத்தில் காணப்பட்ட எழுத்துருக்களுக்கும் இன்றய தமிழ் எழுத்துருக்களுக்கு முன்னோடியான தமிழ் பிராமி எழுத்துருக்களுக்கும் தொடர்புகள் இருப்பதற்கான சான்றுகள் இருப்பதாக அறியப்படுகிறது.

ஐந்தாம் கட்ட அகழ்வுகள், வைகை ஆற்றங் கரையோரம் பட்டினங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்க வழிசெய்திருந்தன. சிந்துவெளி நாகரீக மக்களின் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டதும், அவர்கள் கி.மு. 1500 ஆண்டளவில் வைகையாற்றங் கரையில் குடியேறியிருக்கலாமென நீண்டகாலமாகச் சந்தேகிக்கப்பட்டு வந்தது. இக் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் காரணமாக ஆறாவது கட்ட அகழ்வுகளை மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.


Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>