IndiaNews

தமிழ்நாடு | நீட் பரீட்சை காரணமாக 5 நாட்களில் 3 மாணவர்கள் தற்கொலை!


கடந்த ஞாயிற்றுக்க்கிழமை நடைபெற்று முடிந்த, இந்திய, தேசிய ரீதியிலான மருத்துவம் சார்ந்த இளமானிக் கற்கைக்கான (undergraduate level entrance exams for Life Sciences) இடத்தேர்வுப் பரீட்சையில் தாம் சித்தியடையாமல் போய்விடுவோமோ என்ற அச்சத்தில் மன உளைச்சலுக்கு உள்ளாகியதால் தமிழ் நாட்டில் கடந்த 5 நாட்களில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சவுந்தர்யா என்பவரே மூன்றாவதாத் தற்கொலை செய்த மாணவியாகும். தலையாரம்பற்று கிராமத்தைச் சேர்ந்த சவுந்தர்யா, பரீட்சையில் தான் சித்தியடையாமல் போய்விடுவேனோ எந்ற அச்சத்தில் இன்று (புதன், செப் 15) தற்கொலை செய்துகொண்டாரென அவரது குடும்பம் அறிவித்துள்ளது.

தனது 12 ம் வகுப்பு பரிசோதனையில், மொத்தம் 600 மதிப்பெண்களில் 510 ஐப் பெற்றிருந்தவர் சவுந்தர்யா. ஆனாலும் நீட் பரிசோதனையில் தான் நல்லாகச் செய்யவில்லை என அவர் தந்து நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் கூறியிருந்ததாகத் தெரியவருகிறது.

சவுந்தர்யாவின் மரணம் கடந்த 5 நாட்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மூன்றாவது தற்கொலையாகும். திங்களன்று, அரியலூர் மாவட்டத்திலுள்ள சதம்பாடி என்னும் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய கனிமொழியும், சனிக்கிழமை (செப் 11) , நீட் பரீட்சைக்கு முதல் நாள், சேலத்தைச் சேர்ந்த 20 வயதுடைய தநுஷும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.

இப் பரீட்சையினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த, அரச பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களே. அத்தோடு பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலோர் தமிழ் மூலம் கல்வி கற்பவர்கள். வசதி படைத்தவர்கள் ஆங்கில மொழி மூலம் கற்பதுடன், இதர உதவிகளையும் அவர்களால் பெற முடிகிறது.



இதனால் தற்போதைய மாநில அரசு தேசிய ரீதியிலான இப் பரீட்சையைத் தடை செய்யவேண்டுமென தமிழ்நாடு சட்டசபையில் ஒரு சட்டமூலமொன்றை செப்டம்பர் 13 அன்று நிறைவேற்றியுள்ளது. பா.ஜ.க. வைத் தவிர்ந்த அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவளித்துள்ளன.

சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட இத் திருத்தம், தேசிய ரீதியிலான பரீட்சைக்குப் பதிலாக 12 ஆம் வகுப்பு பரீட்சையின் பெறுபேறுகளில் தங்கியிருத்தலே நல்லது எனப் பிரேரிக்கிறது. அது சட்டமாவதற்கு தமிழ்நாடு ஆளுனரின் ஒப்புதல் வேண்டும். அதே வேளை, நீட் ஒரு மத்திய அரசின் சட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் அதன் மீதான எந்தத் திருத்தமும் ஜனாதிபதியின் அனுமதியுடனேயே நிறைவேற்றப்படட முடியும்.