தமிழ்நாடு | நடிகர் விஜய் அரசியலில் குதிக்கலாம்?


அக்டோபர் 6-9 வரை நடைபெறும் தமிழ்நாடு உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் நடிகர் விஜையின் ‘விஜய் மக்கள் இயக்கத்’ தொண்டர்கள் விஜய்யின் படங்கள் மற்றும் அவரது இயக்கத்தின் கொடிகளுடன் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு நடிகர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இக்காரணங்களை முன்வைத்து நடிகர் விஜய் அரசியலில் குதிக்கலாம் என்ற ஐயங்களைத் தமிழ்நாட்டு ஊடகங்கள் சில எழுப்பி வருகின்றன.

நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் எவரும் போட்டியிடவில்லை எனவும் ஆனாலும் இதர வேபாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. சில பிரசாரக் கூட்டங்களில் விஜய்யின் உருவப்படத்தைத் தாங்கிய பதாகைகள் பாவிக்கப்பட்டதை முன்வைத்து ஊடகங்கள் இச் சந்தேகத்தை எழுப்பியுள்ளன. படத்தைப் பாவிப்பதற்கு நடிகர் விஜய் அனுமதி வழங்கியிருந்ததாக அவரது ரசிகர்களை மேற்கோள் காட்டி ரைம்ஸ் ஒஃப் இந்தியா செய்தி வெளியிட்டுல்ளது.

புதிதாக மாற்றியமைக்கப்பட்ட மாவட்டங்களான செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப் பேட்டை, விழுப்புரம், வேலூர், காஞ்சீபுரம், தென்காசி, திருநெல்வேலி, திருப்பதி ஆகியவற்றில் தற்போது பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெறுகின்றன.