Spread the love

பொங்கல் நாளன்று வெளியாகும் சில படங்களின் வருவாய்க்காகத் திரையரங்குகள் 100% கொள்ளளவில் செயற்படுவதற்காகச் சமீபத்தில் தமிழ்நாடு அரசு வழங்கியிருந்த அனுமதியை மீளப்பெற்றுக்கொள்ளும்படி மத்திய அரசின் உள்ளக அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே இருந்த 50% கொள்ளளவில் மட்டுமே திரையரங்குகள் பார்வையாளர்களை அனுமதிக்க முடியுமென மத்திய அரசிந் உள்ளகச் செயலாளர் அஜே பல்லா, தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் திரு சண்முகத்திற்கு அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவித்தலை வெளியிடவேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் வெளியீடான மாஸ்டர் திரைப்படம் வெற்றிபெறவேண்டுமென்பதற்காக, நடிகர் விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து திரையரங்குகளுக்கு 100% அனுமதியை வழங்கும்படி கேட்டுக்கொண்டதற்கிணங்க முதலமைச்சர் 100% திறப்புக்கான அனுமதியை வழங்கியிருந்தார். நடிகர் சிலம்பரசனும், பொங்கல் வெளீயீடான ஈஸ்வரன் படத்திற்காக இதே போன்ற வேண்டுகோளை விடுத்திருந்தார்.

தமிழ்நாடு அரசின் இந் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு உருவாகியிருந்தது.

Print Friendly, PDF & Email
Related:  'மாஸ்டர்' பட வெளியீடு | நோய்த் தடுப்பு முயற்சிகளை உதாசீனம் செய்து திரையரங்குகளை முற்றுகையிடும் ரசிகர்கள்!