Spread the love

தமிழ்நாடு | சசிகலா ஜனவரி 2021 இல் விடுதலை செய்யப்படலாம்? 1
சசிகலா

பெங்களூரு பரப்பான அக்ரஹார மத்திய சிறையில் வைக்கப்பட்டிருக்கும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா எதிர்வரும் ஜனவரி மாத்ம் 27ம் திகதி விடுதலை செய்யப்படலாமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு சட்டத்தரணியும், செயற்பாட்டாளருமாகிய நரசிம்ம மூர்த்தியின் தகவல் தெரிந்துகொள்ளும் கோரிக்கையின் பிரகாரம் இச் செய்தி வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.

நீதிமன்றத்தினால் கொடுக்கப்பட்டுள்ள தண்டப்பணத்தை சசிகலா கட்டத் தவறினால் அவரது விடுதலை மேலும் ஒரு வருடத்திற்குப் பின் போடப்படலாம். அத்தோடு அவர் மேலும் தற்காலிக விடுப்புக்கு (parole) விண்ணப்பித்தால் அவரது விடுதலை பின்போடப்படுவதற்குச் சாத்தியங்களுண்டு.

2017 இல் கர்நாகட உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மத்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்து, சசிகலாவுக்கும் அவரோடு குற்ற்ம் சாட்டப்பட்டிருந்த மற்றவர்களுக்கும் 4 வருட சிறைத்தண்டனையும், 10 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.



பெங்களூரு சிறையில், சசிகலா போன்ற பிரபல கைதிகளுக்கு சிறை அதிகாரிகள் பல சலுகைகளைப் புரிந்தார்கள் என ஐ.பி.எஸ். அதிகாரி டி.ரூபா அவர்கள் தெரிவித்திருந்தார்கள். பாதுகாப்பு என்ற போர்வையில் சிறையில் 5 அறைகள் சசிகலாவின் பாவனைக்காக வழங்கப்பட்டிருந்தது எனவும், அவரைப் பார்க்க வருபவர்கள் மிக நீண்ட நேரத்துக்கு அனுமதிக்கப்படுவதும், சிறைக்குள் சுதந்திரமான நடமாட்டத்துக்கு அனுமதிக்கப்பட்டதும், அவருக்கு வழங்கப்பட்ட சில சலுகைகள். இருப்பினும் சசிகலாவின் ‘நன்நடத்தை’யின் காரணத்தால் அவர் இந்த மாத இறுதியில் (செப்டம்பர் 2020) அல்லது அக்டோபரில் விடுதலையாகலாம் என அவரது சட்டத்தரணி ராஜா செந்தூர பாண்டியன் சில நாட்களின் முன் தெரிவித்திருந்தார்.

Print Friendly, PDF & Email
Related:  பேரறிவாளனின் தற்காலிக விடுதலைக்கு (parole) தமிழ்நாடு அரசு மறுப்பு

தமிழ்நாடு | சசிகலா ஜனவரி 2021 இல் விடுதலை செய்யப்படலாம்?