தமிழ்நாடு காவல்துறையின் தொடரும் அராஜகம் – பிடியாணை இல்லாது குறவர் சமூக மக்களைக் கைதுசெய்கிறது
தமிழ்நாடு
சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் காண்பித்த வகையில் தமிழ்நாடு காவல்துறையின் அராஜகம் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

நவம்பர் 14 அன்று தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறையினர் குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர்களின் வீடுகளில் புகுந்து வெள்ளி, தங்க நகைகளைத் தரும்படி அட்டகாசம் செய்துள்ளரெனப் புகார் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றியதாகச் சில நகைகள் பொய்யாக அடையாளம் காட்டப்பட்டதாகவும், திரப்படத்தில் வந்தது போலவே செய்யாத குற்றத்தை ஒத்துக்கொள்ளும்படி அவர்கள் மோசமாகத் தாக்கப்பட்டதாகவும் கைதுசெய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
களவு போனாதாகக் குறிப்பிடப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட தடயங்கள் கைது செய்யப்பட்ட 5 பேர்களின் கைவிரலடையாளங்களுடன் ஒத்துப் போவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்களின் வாக்குமூலப்படி அவர்கள் அனைவரும் சுற்றவாளிகள் எனத் தெரிகிறது.
நேற்று (17) வரை, கைதுசெய்யப்பட்ட ஒருவர் மீது 13 குற்றங்கள் பதியப்பட்டுள்ளது. ” ஒரு வேளைச் சோற்றுக்கே நாங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. எங்களிடம் எப்படி தங்கம், வெள்ளிகள் இருக்க முடியும்?” எனக் கைது செய்யப்பட்ட ஒருவரின் மனைவி தெரிவித்ததாக ‘தி நியூஸ் மினிட்’ இணையம் தெரிவித்துள்ளது. (தி நியூஸ் மினிட்)