India

தமிழ்நாடு | ‘என் மண், என் மக்கள்’ – அண்ணாமலையின் 6 மாத பாத யாத்திரை

மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்

‘என் மண், என் மக்கள்’ என்ற சுலோகத்துடன் தமிழ்நாடு மாநில வாரியான 6 மாத கால பாதயாத்திரை ஒன்றை தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ளார். கடந்த வெள்ளியன்று ராமேஸ்வரத்தில் வைத்து ஆரம்பமான இய்யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடக்கி வைத்தார். சனி முதல் அண்ணாமலை இப்பாத யாத்திரையை மேற்கொள்ளவுள்ளார் என அறியப்படுகிறது.

தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளூடும் இய்யாத்திரை செல்லும் எனவும் இதன் மூலம் அடுத்து வரவிருக்கும் மாநில சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு சார்பாகப் பாரிய மாற்றங்கள் ஏற்படும் சாத்தியமுண்டு என கட்சி நம்புவதாகவும் தெரிகிறது. முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை தமிழ்நாடு பா.ஜ.க. தலமைப் பதவியை ஏற்ற நாளிலிருந்து மிகவும் கடுமையாக உழைத்து வருவதோடு தி.மு.க. வின் பல மூத்த தலைவர்களது ஊழல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். முதல்வர் மு.க..ஸ்டாலின் முந்தைய தி.மு.க. அரசில் உதவி முதலமைச்சராக இருந்தபோது அவர் செய்ததாகக் கருதப்படும் ஊழல் வழக்கொன்றும் இதிலடங்கும்.

2024 ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்பதாக, ஜனவரி 11, 2024 இல் இப்பாத யாத்திரை முற்றுப்பெறும் எனக் கூறப்படுகிறது. இய்யாத்திரையில் மொத்த பயண தூரம் சுமார் 1,770 கி.மீ. ஆக இருக்குமெனவும் இத்தூரத்தைப் பெரும்பாலும் நடையாகவும் சில கிராமப்புறங்களை வாகன மூலமாகவும் மேற்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். இயாத்திரையின் போது குறைந்தது 10 முக்கிய கூட்டங்கள் நடைபெறுமெனவும் அப்போது ஒவ்வொரு கூட்டத்திலும் மத்திய கட்சியின் முக்கிய தலைவர்கள் உடபட அமைச்சர்கள் ஒருவாராவது பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது. (படம்: தி நியூஸ் மினிட்)