தமிழ்நாடு: அதியுச்ச வருமானவரி செலுத்தும் ரஜினிகாந்த்

வருமானவரித் திணைக்களம் விருது வழங்குகிறது

தமிழ்நாடு மாநிலத்திலேயே அதியுச்ச வருமானவரியைச் செலுத்தும் தனிநபர் நடிகர் ரஜினிகாந்த் என மாநில வருமானவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜூலை 24 அன்று அறிவிக்கப்பட்ட இவ் விருதை ரஜினிகாந்த் சார்பில், தெலங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜனிடமிருந்து ரஜினியின் மகள் ஐஸ்வர்யா பெற்றுள்ளார்.

“அதிகமான தொகையை வரிப்பணமாகக் காலதமதமின்றிச் செலுத்தும் ஒருவரின் மகளாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். 2022 வருமானவரி தினமன்று இதை அறிவித்து எனது அப்பாவைப் பெருமைப்படுத்தியமைக்காக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வருமானவரித் திணைக்களங்களுக்கு அப்பாவின் சார்பில் நன்றியைத் தெரிவிஹ்துக்கொள்கிறேன்” என இது குறித்து தனது சமூகவலைத் தளத்தில் ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் தனது அடுத்த படமான, நெல்சன் திலிப்குமாரின் இயக்கத்தில் உருவாகும் ஜெய்லர் படம் தொடர்பாகத் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கிறார். இப் படத்திற்கு அனுருத் ரவிசந்தர் இசையமைக்கிறார். கடந்த நவம்பரில் வெளியான ரஜினியின் அண்ணாத்தே எதிர்ப்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் அங்கீகாரத்தைப் பெறவில்லை. 180 கோடி ரூபா செலவில் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸினால் தயாரிக்கப்பட்ட் இப்படம் 240 கோடி ரூபாக்களை வசூலாகப் பெற்றிருந்தது.