தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு உகந்த தீர்வு முன்வைக்கப்படாவிட்டால் நாம் இனிமேல் கலந்துகொள்ளப் போவதில்லை – எம்.ஏ.சுமந்திரன்
சமூக நீதிக்கான மக்கள் இயக்க மாநாட்டில் உரை
கடந்த சனிக்கிழமை நாரஹேன்பிட்டியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பா.உ. எம்.ஏ.சுமந்திரன் ஆற்றிய உரையின் காணொளி இங்கே தரப்படுகிறது.
முன்நாள் சபாநாயகரான கரு ஜயசூரிய அவர்கள் தலைமையில் இயங்கும் அமைப்பான சமூக நீதிக்கான தேசிய இயக்கம் (National Movement Social Justice) மற்றும் எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேஹய ஆகியன இணைந்து ஒழுங்குசெய்திருந்த இம் மாநாட்டில் பலதரப்பட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இம் மாநாட்டில் உரையாற்றிய திரு சுமந்திரன், “கடந்த காலங்களில் நாங்கள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தபோதும் நாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டோம். 30 வருட ஆயுதப் போராட்டம் முடிவுற்றிருக்கலாம் ஆனால் தமிழ்த் தேசியப் பிரச்சினை இன்னும் முடியவில்லை. அதற்கான உறுதியான தீர்வொன்று முன்வைக்கப்படாவிட்டால் நாம் அடுத்த கூட்டத்திற்கு சமூகமளிக்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.