LIFEUS & Canada

தமிழ்க் கனடியர் இருவருக்கு அரச விருது

கனடிய நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் பல சேவைகளைப் புரிந்து வருவதைப் பாராட்டுமுகமாக கனடியத் தமிழர்களான சுகுமார் கணேசன் மற்றும் குலா செல்லத்துரை ஆகியோருக்கு விருதுகள் கொடுத்து கனடா கெளரவித்திருக்கிறது. இங்கிலாந்தின் மகாராணியாரான இரண்டாம் எலிசபெத்தின் 70 ஆண்டுகால தொடர்ச்சியான ஆட்சியைக் கொண்டாடும் விதத்தில் கனடா தன் நாட்டின் சிறப்பான மனிதர்களுக்கு ‘பிளாட்டினம் ஜூபிலீ’ (Platinum Jubilee) விருதுகளைக் கொடுத்துக் கெளரவித்திருந்தது.

சுகுமார் கணேசன் மற்றும் குலா செல்லத்துரை ஆகியோர் கனடியத் தமிழர் சமூகத்தில் மிகவும் அறியப்பட்ட தொழில் முகவர்கள் ஆவர். இவர்கள் இருவரும் மேற்கொண்டுவரும் வியாபார முயற்சிகள் மூலம் ஈட்டும் பணத்தில் பல கனடிய மற்றும் இலங்கைச் சமூக அபிவிருத்திப் பணிகளுக்கு உதவிகளைப் புரிந்து வருகிறார்கள்.