தமிழிசை, கனிமொழி வேட்புமனுத் தாக்கல்: ‘வெற்றி பெறுவேன்’ என இருவரும் நம்பிக்கை

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி பெயரில் மொத்தம் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து, பாஜக வேட்பாளர் தமிழிசை பெயரில் ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது.

கனிமொழியின் தெரிவித்துள்ள விவரம்: என் மீதான 6 குற்ற வழக்குகளில் 2 வழக்குகளில் விசாரணை முடிக்கப்பட்டு, குற்றமற்றவர் என விடுவிக் கப்பட்டுள்ளேன். 3 வழக்குகளில் இன்னும் விசாரணை முடியவில்லை. இந்த வழக்குகளில் இன்னும் குற்றம்சாட்டப்படவில்லை. மேலும், ஒரு வழக்கு தனிநபர் புகார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் இருந்து இதுவரை சம்மன் வரவில்லை. >>மேலும்>>