தமிழர் வாழும் பிரதேசங்களில் மட்டும் ஏன் நோய்த் தொற்றுப் பரிசோதனை நிலையங்கள்?

மார்ச் 12, 2020

த .தே. கூட்டமைப்பின் ஊடக அறிக்கை

வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்களா என்பதை பரிசோதிப்பதற்காக அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பதற்காக “Batticallo
Campus” இனை அரசாங்கம் உபயோகிப்பதற்கு எதிராக பிரதேச மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்பதனை நாம் வலியுறுத்துகின்ற அதேவேளை, ஏன் இந்த ஆபத்தான நோயினை கையாள்வதற்கான நிலையங்களை தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் ஏற்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கையானது மக்கள் மத்தியில் அச்சத்தினை தோற்றுவித்துள்ளது.

எனவே நாட்டில் ஒரு சுமூக நிலைமையினை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசாங்கமானது மக்கள் செறிவற்ற பிரதேசங்களை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கண்டுபிடித்து இத்தகைய தனிமைப்படுத்தும் முகாம்களை அமைக்க வேண்டும் என நாம் வேண்டுவதோடு, மக்களின் அபிப்பிராயங்களிற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம் என்பதனையும் நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.

எம் ஏ சுமந்திரன்
ஊடக பேச்சாளர்
தமிழ் தேசிய கூட்டமைப்பு