Spread the love
ஜஸ்மின் சூகா (ITJP)
யஸ்மின் சூக்கா (ITJP)

இலங்கை இராணுவத்தினருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுமுன் அவர்கள் போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பதை விசாரித்தறிந்த பின்பே பதவிஉயர்வு வழங்க வேண்டுமென்பது ஐ.நா. தீர்மானம் 30/1 இல் இலங்கை அரசு உடன்பட்ட ஒரு விடயம். ஆனாலும் 11 வது போர் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் ஜனாதிபதி ராஜபக்ச போர்க்குற்றதில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களுக்கும், நீதிமன்றங்களில் குற்றவாளிகள் எனக் காணப்பட்டவர்களுக்கும் வேண்டுமென்றே பதவி உயர்வுகள் வழங்கியிருக்கிறார்.

“இங்கு பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களின் தேர்வு மிகவும் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒன்று. நல்லிணக்கம் பற்றி ஒரு சொல் கூட பேசப்படாததன் மூலம் அது எங்கள் நிகழ்ச்சி நிரலிலேயே கிடையாது எனபதே இலங்கையர்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் சொல்லப்பட்ட செய்தி” என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டத்தின் (IJTP) நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.லண்டன் ‘கழுத்துவெட்டு’ சைகை விவகாரம்

இப் பதவி உய்ரவுகளில் மிகவும் குறிப்பிடக்கூடிய ஒன்று, பிரியங்கா பெர்ணாண்டோவினது. 2018 இல், பிரித்தானியாவில் இலங்கையின் பிரதானியாகவிருந்தபோது, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ‘கழுத்தை வெட்டுவேன்’ எனச் சைகை காட்டிய காரணத்தால் பிரித்தானிய நீதிமன்றம் அவருக்குத் தண்டனை வழங்கியிருந்தது. அவர் இலங்கைக்குத் திரும்பியதும் அவர் ஒரு ‘ஹீரோ’ வாகப் புகழப்பட்டு அடுத்தடுத்து பதவி உயர்வுகளும் வழஙகப்பட்டன.

போரின்போது 511 படைப்பிரிவின் தளபதியாக இருந்து தனக்குக் கீழ் பணிபுரிந்தார் எனக்கூறிய பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன, தானும் கழுத்தை வெட்டும் சைகையைச் செய்துகாட்டியதோடு, பிரித்தானிய சம்பவம் தனக்கு இரத்தத்தைக் கொதிக்க வைத்ததாகவும் கூறியிருந்தார்.

“இதிலிருந்து இராணுவ அதிகாரிகளுக்கும், அரச பிரதானிகளுக்கும் சொல்லப்படும் செய்தி என்னவென்றால், நீங்கள் உலகமெங்கும் சென்று தமிழர்களை மிரட்டுவீர்களானால் உங்களுக்குச் சன்மானம் காத்திருக்கிறது என்பதே. அத்தோடு பிரித்தானியாவின் நீதித்துறையை மிகவும் மோசமாக அவமதித்திருக்கிறது” என மேலும் தெரிவித்தார் யஸ்மின் சூக்கா.

இசைப்பிரியா விவகாரம்

மே 2009 இல் தமிழ்த் தொலைக்காட்சி ஊடகவியலாளர் இசைப்பிரியா அவர்களது படுகொலையோடு தொடர்புடைய விசேட படைத் தளபதியான ஹரேந்திர பராக்கிரம ரணசிங்கவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இசைப்பிரியா சரணடையும்போது அவரை ஏற்றுக்கொண்ட காணொளியில் இவர் இருக்கிறார் என்பதும், இது தொடர்பாக ஐ.நா. மேற்கொண்ட விசாரணையிந்மூலம் பின்னர் தெரியவந்திருந்தது. இசைப்பிரியாவின் கொல்லப்பட்ட உடலோடு வெற்றிக்களிப்பைக் கொண்டாடும் படத்திலும் ரணசிங்க உள்ளார். அப்படியிருந்தும் அவரும் பதஹ்வி உயர்வு வழங்கிக் கெளரவிக்கப்பட்டிருப்பது இலங்கை அரசு பொறுப்புக்கூறல் விடயத்தையும் துச்சமாக மதிப்பதையே காட்டுகிறது.

தடுப்புக் காவலில் இருந்த தமிழ் சந்தேக நபர்களைத் துன்புறுத்தியதாகச் சந்தேகப்படும் 512 ஆவது பிரிகேட் தளபதியாகிய சன்னா டி. வீரசூரியாவுக்கும் பதவி உயர்வு வழங்கபட்டிருக்கிறது.

Related:  இலங்கை | வருமானம் குறைந்த குடும்பங்களிலுள்ளவர்களுக்கு அரச வேலை வாய்ப்பு - செப்டம்பர் 2 இல் ஆரம்பம்!

நாடு தொடர்ந்து இராணுவமயமாக்கமடைந்துவரும் வேளையில், ஜனாதிபதிக்கு நெருக்கமான பல இராணுவத்தினர் பல சிவிலியன் கடமைகளில் அமர்த்தப்பட்டும், பலருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டும் வருகின்றமை கவலை அளிப்பதாக உள்ளது. கோவிட்-19 அச்சுறுத்தல் பரவலாக இருக்கின்ற வேளையில், இப்படியான கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்பட்ட அதே வேளை, அதே காரணங்களைக் காட்டி அரசு தமிழர் வாழும் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் ஞாபகர்த்த நிகழ்வுகளைத் தடை செய்துமுள்ளது.மேஜர் ஜெனெரல்களாகப் பதவி உயர்த்தப்பட்ட ஐந்து பேர்:

  1. பிரியங்கா இந்துனில் பெர்ணாண்டோ (கெமுனு படைப் பிரிவு 511 வது பிரிகேட் தளபதி, 59 வது படைப்பிரிவு – பிரித்தானிய ‘கழுத்து வெட்டு’ புகழ்)
  2. ஹரேந்திர பராக்கிரம ரணசிங்க (571 வது பிரிகேட் தளபதி, 57வது படைப்பிரிவு. இசைப்பிரியா கொலை)
  3. ஜகத் கொடித்துவக்கு (காலாட்படை, 581/571 பிரிகேட்டுகளின் கீழ், 57&58 படைப்பிரிவுகளின் கீழ். மடு தேவாலய தாக்குதல்கள்)
  4. சன்னா டி.வீரசூரியா (காலாட்படை, 2010, 2011 களில் கைதிகளைத் துன்புறுத்தியவர்)
  5. சண்டன உடித் மாரசிங்க (கிழக்கு மாகாணப் படை வழங்குனர். 2010 ஹெயிட்டி அமைதிப்படைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்)
Print Friendly, PDF & Email
தமிழரை மிரட்டினால் பதவி உயர்வு – இலங்கை இராணுவத்தின் புதிய விதிமுறை – யஸ்மின் சூக்கா

தமிழரை மிரட்டினால் பதவி உயர்வு – இலங்கை இராணுவத்தின் புதிய விதிமுறை – யஸ்மின் சூக்கா