தமிழருக்கொரு நியாயமான தீர்வை முன்வைத்தால் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும்- சபையில் திரு.சம்பந்தன்

Spread the love

ஜனவரி 8, 2020

இந்தியாவும் சர்வதேசமும் இலங்கைக்கு வழங்கிய உதவியினால்தான் புலிகள் தோல்வி சாத்தியமாகியிருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.சம்பந்தன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

த.தே.கூ. தலைவர் திரு. சம்பந்தன்

பேஷ்சுவார்த்தையின் மூலம் ஒரு நியாயமான தீர்வைப் பெறுவதற்கு விடுதலைப் புலிகள் தடையாக இருக்கின்றனர் என இலங்கையும் இந்தியாவும் நம்பின எனவும், நியாயமான தீர்வொன்றைக் கொடுப்போம் என அப்போது இருந்த அரசு இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் கொடுத்திருந்த வாக்குறுதிகளை நம்பியே அவர்கள் புலிகளைத் தோற்கடிக்க உதவினார்கள் ஆனால் அவ் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் திரு. சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“அவ் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். மீறப்பட முடியாது. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு, இலங்கை அரசு சர்வதேசத்தைப் பாவித்ததாகவே பார்க்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய, பிரிக்கப்படாத இலங்கையை உள்ளடக்கிய அரசியல் தீர்வொன்றைத் தமிழருக்கு இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

அப்படியொரு தீர்வை நோக்கி ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச செயற்பட்டால் கூட்டமைப்பின் ஆதரவு அவருக்குண்டு என்று திரு சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>