Spread the love

செப்டம்பர் 11, 2020: இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு கே.துரைராஜசிங்கம் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தனது சொந்தக் காரணங்களுக்காகப் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்த அவர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் அனுப்பியிருக்கிறார்.

2014ம் ஆன்டிலிருந்து திரு துரைராஜசிங்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராகவிருக்கிறார்.

கட்சித் தலைவரோடு ஆலோசிக்காமல், கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பாக தவராஜா கலையரசனின் பெயரைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியது தவறென துரைராஜசிங்கம் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் அந் நியமனத்தைக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்குக் கொடுப்பதெனப் பின்னர் தீர்மானம் எடுக்கப்பட்டது. துரைராஜசிங்கத்தின் கடிதம் தேர்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே அனுப்பப்பட்டிருந்ததால் சேனாதிராஜாவுக்கு பாராளுமன்றப் பதவி கிடைக்காமல் போனது. இதைத் தொடர்ந்து கட்சிக்குள் இழுபறிகள் தொடர்ந்தவண்ணமிருந்தன.

Print Friendly, PDF & Email
Related:  Yarl IT Hub நடத்தும் வருடாந்த திறமைப் போட்டி (Yarl Geek Challenge)
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் பதவி விலகினார்

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் பதவி விலகினார்