தன் குட்டியைக் காப்பாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் யானை!
நவம்பர் 11, 2019
குழிக்குள் விழுந்த யானைக் குட்டியைக் காப்பாற்றிய மனிதர்களைத் தன் தும்பிக்கையைத் தூக்கி வணங்கும் யானையின் காணொளி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.

இந்திய வெளிநாட்டுச் சேவை அதிகாரியான பர்வீன் கஸ்வானினால் ருவிட்டரில் பதிவேற்றப்பட்ட இக் காணொளி 6100 தடவைகளுக்கு மேல் இதுவரை பார்க்கப்பட்டு விட்டது. தனக்கு இப் பதிவு வட்ஸப்பில் வந்ததாக அவர் கூறுகிறார்.
குழிக்குள் விழுந்த குட்டியைச் சில நல்லுணர்வாளர்கள் கனரக இயந்திரம் கொண்டு காப்பற்றுவதையும் குட்டி யானையை அணைத்துக்கொண்டு யானைக் கூட்டம் நதியைக் கடப்பதற்கு முன் தாய் யானை காப்பாற்றியவர்களை நோக்கித் திரும்பித் தன் தும்பிக்கையைத் தூக்கி வணங்கி நன்றி தெரிவிப்பதையும் இக் காணொளி பதிவு செய்கிறது.
இப்படியான சந்தர்ப்பங்களில் யானைகள் ஆபத்தில் சிக்கிய தமது கூட்டத்தில் ஒன்றைத் தாமே காப்பாற்ற முனைவதும் முடியாத பட்சத்தில் மனிதர்களின் உதவியைப் பெறுவதற்காக இடம் கொடுத்து விலகிக்கொள்வது யானைகளின் குணாம்சமென்ற குறிப்பொன்றும் இற் ருவீட்டில் பதியப்பட்டுள்ளது.
இக் காணொளியில் யானைக் குட்டி குழிக்குள் இருந்து தப்ப முனைவதையும் மண் சறுக்கியதால் அதனால் வெளியே வர முடியாமலிருப்பதையும் காணொளியில் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
இதஹிப் பார்த்த சில நல்லுள்ளளம் கொண்ட மனிதர் கனரக இயந்திரத்தைக் கொண்டு யானைக் குட்டியைக் காப்பாற்றுகிறார்கள். யானைக் குட்டி வெளியே வந்ததும் சில மீட்டர்களுக்கு அப்பால் காத்துக்கொண்டு நின்ற தன் குடும்பத்துடன் ஓடிப்போகிறது.
இத்ல் சிறப்பம்சம் என்னவென்றால், யானைக் குடும்பம் அவ்விடத்தை விட்டு நகர்வதற்கு முன்னர் தாய் யானை தன் குட்டியைக் காப்பாற்றீய மனிதர்களைத் திரும்பிப் பார்த்துத் தன் தும்பிக்கையை உயர்த்தி நன்றி தெரிவிப்பதே.