தனு யாத்திரா – உலகின் அதி பெரிய திறந்தவெளி அரங்க விழா
கின்னஸ் நூலில் இடம்பெறும் கலாச்சார விழா
உலகின் அதி பெரிய திறந்தவெளி அரங்க விழா இந்தியாவின் பார்கார் பிரதேசத்தில் கொண்டாடப்படும் வருடாந்த மாரி விழாவாகும்.
கிருஷ்ணன் மதுராவை வெற்றிகொண்டதை அடிப்படையாகக்கொண்ட கிருஷ்ண லீலா விழாவாக இது கொண்டாடப்பட்டாலும், இது உண்மையில் இந்தியாவிலிருந்து பிரித்தானியர் வெளியேறுவதைக் கொண்டாடுவதன் பொருட்டே ஆரம்பிக்கப்பட்டது. 1948 இல் சில தொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழா திறந்த வெளியரங்கில் வருடா வருடம் மார்கழி முதலாம் வாரத்தில் ஆரம்பித்து தை இரண்டாம் வாரம்வரை நடைபெறுகிறது. தனு யாத்திரா என அழைக்கப்படும் இவ்விழாவில் பல நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.