தனுஷ் – வெற்றிமாறனின் ‘அசுரன்’ அக்டோபர் 4 திரைக்கு வருகிறது

Spread the love

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், வெற்றிமாறனின் இயக்கத்திலும் உருவாகிவரும் ‘அசுரன்’ அக்டோபர் 4 திரைக்கு வருகிறது. மலையாள் நடிகை மஞ்சு வரியர், பாலாஜி சக்திவேல் ஆகியோர் இதில் முன்னணிப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள். தனுஷ் இதில் இரட்டை வேடமேற்று நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், பசுபதி ஆகியோரும் இப் படத்தில் முக்கிய பாத்திரங்களை ஏற்றிருக்கிறார்கள்.

பூமணியால் எழுதப்பட்ட ‘வெக்கை’ என்னும் கதையை மூலமாகக் கொண்டது ‘அசுரன்’. ‘வட சென்னை’ யின் வெற்றிக்குப் பிறகு தனுஷ், வெற்றிமாறன் இணைந்து மிகக் குறுகிய காலத்தில் இப்படத்தை இயக்கி வெளிக்கொணரவிருக்கிறார்கள். ‘ஆடுகளம்’, ‘பொல்லாதவன்’ ஆகிய படங்களும் இவ்விருவருக்கும் வெற்றியை ஈட்டிக்கொடுத்திருந்தன.

‘V Creations’ என்ற நிறுவனத்தின் பெயரில் கலைப்புலி எஸ்.தாணு இப் படத்தைத் தயாரிக்கிறார்.

 

 


Print Friendly, PDF & Email
Related:  முதலமைச்சர் பதவியை நான் ஏற்கப்போவதில்லை - ரஜினிகாந்த்
>/center>