தனுஷுக்குப் புதிய பெற்றோர் – பாவம் யாரு பெத்த பிள்ளையோ?

  • மதுரையைச் சேர்ந்த தம்பதி மாதம் ரூ.65,000 பராமரிப்பு பணம் கோரிக்கை
  • தனுஷ், கஸ்தூரி ராஜா ரூ.10 கோடி மானநஷட வழக்கு
  • மரபணுப் பரிசோதனைக்கு தனுஷ மறுப்ப

நடிகர் தனுஷுக்குக் காலம் சரியில்லை. ஒரு மாதிரி மாமியாரின் ‘அறக்’கட்டளையிலிருந்து இப்போதுதான் வெளிவந்தவர் இப்போ புதிய பெற்றோரைப் பெற்றிருக்கிறார். அல்லது அவர்கள் தனுஷைப் பிள்ளையாக்க முயற்சிக்கிறார்கள்.

சினிமாவில் நடிப்பதற்காக சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவிட்ட தமது மூன்றாவது மகன்தான் தனுஷ் என்று கூறி அவரிடமிருந்து மாதம் ரூ.65,000 பராமரிப்பு பணம் கோரி மதுரையைச் சேர்ந்த தம்பதி ஒன்று வழக்குப் பதிந்திருக்கிரார்கள்.

மதுரையைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி என்ற தமபதிகள் முன்வைத்துள்ள இக் கோரிக்கையில், நடிகர் தனுஷ் தங்களுக்குப் பிறந்த மூன்றாவது மகன் எனவும் திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் காரணமாக சிறுவயதிலேயே வீட்டிலிருந்து ஓடிப்போய்விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இதை மறுத்த நடிகர் தனுஷ் இத் தம்பதிகளுக்கு எதிராக ரூ. 10 கோடி மானநஷ்ட வழக்குப் பதியப்போவதாக வக்கீல் அறிக்கை அனுப்பியுள்ளார்.

“பொய்யான விடயங்களைக் கூறவேண்டாம்” எனக்கூறித் தமது வக்கீல் ஹாஜா மொஹிதீன் கிஸ்டி என்பவரூடாக நடிகர் தனுஷும் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவும் இத் தம்பதிகளுக்கு வக்கீல் அறிக்கை அனுப்பியுள்ளனர். இத்தம்பதிகளினால் பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை எனவும் அவர்கள் இது குறித்து மன்னிப்புக் கோரவேண்டுமெனவும் இதை மீறி அவர்கள் தொடர்ந்தும் இப்படியான செய்திகளைப் பரப்புவார்களானால் நாம் நீதிமன்றம் சென்று அவர்களிடமிருந்து ரூ. 10 கோடி நட்டஈடு கோரவேண்டியிருக்குமெனவும் தனுஷும் கஸ்தூரிராஜாவும் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

பதிவுத் தரவுகளின்படி நடிகர் தனுஷினது உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு கஷ்தூரி ராஜா. அவரது தந்தை திரைப்படத் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா, தாய் விஜயலக்ஸ்மி ஆகும்.

தம்பதிகளின் வழக்கின் பிரகாரம் தனுஷ் மரபணுப் பரிசோதனை செய்யவேண்டுமெனக நீதிமன்றம் கேட்டிருந்தது எனினும் தனுஷும் அவரது வழக்கறிஞர்களும் இதற்கு மறுப்புத் தெரிவித்திருந்ததையடுத்து அவரது பிறப்படையாளங்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும் அதன் முடிவுகள் எதையும் திட்டவட்டமாக உறுதிசெய்யவில்லை எனவும் தெரியவருகிறது.