தனது பதவிக் காலத்தை நீடிக்க ஜனாதிபதி முயற்சி? -

தனது பதவிக் காலத்தை நீடிக்க ஜனாதிபதி முயற்சி?

ஜூன் 20, 2020 வரையில் தனது பதவிக் காலத்தை நீடிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன முயற்சிப்பதாகவும் அதற்கான சாத்தியம் உள்ளதா என உச்ச நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை அறிய முற்படுவதாகவும் அரசியல் வட்டாரங்களில் வதந்தி அடிபடுவாதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின் 129 வது கட்டளை இதற்கு இடமளிக்கிறது என ஜனாதிபதி தரப்பு கருதுவதாக அறிய்பபடுகிறது.

Mahinda Thesapriya

ஜனாதிபதியின் இந்த முயற்சியைத் தகர்த்தெறிய தாம் சகலவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கத் தயங்க மாட்டோம் என சிறீலங்கா பொதுசன பெரமுன கட்சியின் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.

இதே வேளை  நவம்பர் 15 இற்கும் டெசம்பர் 7 க்குமிடையில் ஜனாதிபதி தேர்தலை நடத்தவிருப்பதாகவும் அதற்கான வின்ணப்ப மனுக்களை அக்டோபர் 15 க்குப் பின்னர் கோரவுள்ளதாகவும் தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருக்கிறார்.

 

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *