Art & Literature

தந்தையர் தினம்

இரவும் பகலும் நாளைப் பிய்த்துக்கொண்டன

இரவு ஒன்பது – இன்னும் வெளித்த வானம்


காற்று வழிப்போக்கனைக் காணாது

தலையசைக்க மறுக்கும் மரங்கள்

சடாமுடியிலிருந்து ஊற்றெடுக்கும் கங்கை

வியர்வையாறாய்ப் பெருகி

மார்புப்பள்ளத்தாக்கில் பாய்ந்து

இதயத்தில் சற்றுத் தரித்து

“நளை அப்பா நாள்” சொல்லிவிட்டு

இறங்கியோடுகிறது அவசரத்தில்

– உழைக்காத வியர்வை

ஆனி 2020 – தந்தையர் தினம்