தடைநீக்கத்தைக் கனடிய தமிழர் பேரவை வரவேற்கிறது  

உறுதியான தொடர் நடவடிக்கைகளுக்கு அழைப்பு 

அறிவித்தல்

புலம்பெயர் அமைப்புகள் சில தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதைக் கனடிய தமிழர் பேரவை வரவேற்கிறது. ஆயினும் உறுதியான தொடர் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறது.

இலங்கையில் இன உறவுகள் மற்றும் பொருளாதார விளைவுகள் மேம்படும் வகையில் புதிய இலங்கை அரசாங்கத்தால் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தடைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதைக் கநடிய தமிழர் பேரவை (CTC) வரவேற்கிறது. எவ்வாறாயினும் ஓகஸ்ற் 1, 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பல தமிழ், முஸ்லிம் அமைப்புகள், தனிநபர்கள் இன்னும் தடைப்பட்டியலில் இருப்பது ஏமாற்றத்தையளிக்கிறது.

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவித்தல், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்துத் தனியார் காணிகளையும் விடுவித்தல், வடக்கு கிழக்கை இராணுவமயமாக்கலில் இருந்து விடுவித்தல், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தைக் கனடிய தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்திற்கு முழுமையாக இணங்குமாறும், தற்போதைய தீர்மானத்தின் அனைத்து அம்சங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றுமாறும் இலங்கை அரசாங்கத்தைக் கனடிய தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.

Canadian Tamil Congress welcomes the delisting of Diaspora organizations and calls for more concrete follow-up action.

The Canadian Tamil Congress (CTC) welcomes the delisting of many Tamil Diaspora organisations and individuals by the new Sri Lankan government towards achieving improved ethnic relations and economic outcomes in Sri Lanka. However, it is disappointing that many Tamil and Muslim organisations and individuals are still on the updated list, gazetted on August 1, 2022.

CTC urges the Sri Lankan government for immediate and more follow up actions, which are long overdue – such as release of all Tamil political prisoners, repeal of Prevention of Terrorism Act (PTA) release of all military occupied private lands in the North and East and steps towards demilitarization of the North and East.

CTC also urges the Sri Lankan government to fully comply with the UNHRC resolution 46/1 of 2021 and work with the OHCHR in implementing all aspects of the current resolution.

Canadian Tamil Congress:  (416) 240-0078 / info@canadiantamilcongress.ca