Spread the love

உள்ளும் புறமும் தங்கத்தினால் முலாமிடப்பட்ட Dolce Hanoi Golden Lake Hotel

 Dolce Hanoi Golden Lake Hotel Dolce Hanoi Golden Lake Hotel in Vietnam|  Photo Credit: Instagram

கோவிட்டினால் கட்டிப் போடப்பட்ட சுற்றுலாப் பிரியர்களைச் சுண்டி இழுக்கும் இந்த அதி நவீன தங்கம் ஜொலிக்கும் ஹோட்டல் சுற்றுலா வருமானத்தை இழந்து தவிக்கும் விய்ட்நாமிற்கு இப்போது அவசியமானதுதான்.

குடும்ப விடுமுறைக்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஹோட்டலை நிச்சயம் உங்கள் குழந்தைகள் விரும்புவார்கள்.

ஹனோயில் அமந்திருக்கும் இந்த ஹோட்டலில் உள்ளும் புறமும், செங்கட்டிகள் கூட 24 கரட் தங்கத் தகடுகளினால் போர்க்கப்பட்டவை. குளியலறையிலிருந்து நீச்சல் தடாகத்தின் சுவர்கள் வரை 24 கரட் தங்கத்தால் பளபளக்கும் இக் ஹோட்டல் சொந்தக்காரருக்கு தங்கம் மெத்தித்தான் போயிருக்க வேண்டும்.

ஹோ பின் குரூபிற்குச் சொந்தமான இந்த ஹோட்டலில், ஒரு அறைக்கு, நாளொன்றுக்கு US$ 250 அறவிடப்படுகிறது.


Print Friendly, PDF & Email
Related:  அவுஸ்திரேலியா காட்டுத்தீயில் 3 பில்லியன் விலங்குகள் மரணம்