NewsUS & Canada

ட்றம்ப் 2.0: The Golden Age!

ஜனவரி 20, 2025; ட்றம்பர் அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டார். தேர்தலுக்கு முன், தேர்தலுக்குப் பின் raw ஆக வாய்க்கு வந்தபடி சொன்னதையெல்லாம் மீளவும் நாகரீகமாக உரைத்திருக்கிறார். யாரோ எழுதிக் கொடுத்ததாக இருந்தாலும் ‘இதுவெல்லாம் வெருட்டுக்கள்’ எனப் பண்டிதர்கள் கூறியதை அப்படியே ஒப்புவித்திருக்கிறார். மொந்தையும் பழசு, கள்ளும் பழசு என்றாலும் அமெரிக்கர்கள் அதையே தான் கேட்டு வாங்கியிருக்கிறார்கள். அடுத்த நான்கு வருடங்களில் அம்ரிக்கர்களுக்கும் உலகத்திற்கும் ஏறப்போகும் வெறியினால் என்ன நடக்கப் போகிறதொ தெரியாது. இப்போதைக்கு – அவரது பேச்சு crisp and clear. பைடனை மேலும் அவமானப்படுத்திய பேச்சு.

முதலாம் உலகப் போரின் பின்னர் ஜனாதிபதி ஹேர்பேர்ட் ஹூவரின் வரவும் இப்படியான சலசலப்புகளுடன் தான் ஆரம்பித்தது என வரலாறு சொல்கிறது. போருக்குப் பின்னான ஐரோப்பிய மீளெழுச்சியின் விளைவாக இறக்குமதிகள் அமெரிக்க கரையில் வந்திறங்க ட்றம்ப் மாதிரியே ஹூவரும் அமெரிக்க விவசாயிகளையும் உற்பத்தித் துறைகளையும் பாதுகாப்பேன் எனக்கூறி 20% இறக்குமதித் தீர்வையை விதித்தார். நிபுணர்கள், அறிவாளிகள், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் அமெரிக்க வரலாற்றிலேயே முதல் தடவையாக பொருளாதாரம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. ஹூவரும் தூக்கியெறியப்பட்டார். The Great Depression என வர்ணிக்கப்படும் இந்நிகழ்வின் அடிப்படைக் காரணம் உலக அளவுகோலாக்கப்பட்ட் பிறகும் ட்றம்ப் அதே பாதையில் போவது அவரது விருப்பு. என்றும் போல் எழுந்து நின்று அமெரிக்கா வரவேற்கிறது. மோசமாக முதுகில் குத்தப்பட்ட மக்களின் மனித இயல்பு அது. பேச்சு – ட்றம்ப் ஸ்டைலில் சொல்லப்போனால் – like never before.


ட்றம்பின் வரவை நான் ஆதரிக்கிறேன். பைடன் போன்ற fake மனித உரிமையாளர்களையும் அவர் போன்றவர்களைப் பாவித்து சமத்துவம், சம வாழ்வு என்னும் பெயர்களில் அமெரிக்காவைச் சுருட்டிச் சுகவாழ்வு கண்டவர்களையும் ஓரம் கட்டுவதற்கு மட்டுமாவது ட்றம்ப் வேண்டும். இப்போதைக்கு உலகத்துக்குத் தேவை ஒரு hard reset. போர்கள் நிறுத்தப்படவேண்டும். ட்றம்ப் 1.0 ஆட்சியில் போர்கள் எதையும் ஆரம்பிக்கவில்லை. கிளின்ரன், ஒபாமா, பைடன் போன்ற வேடதாரிகளைப் போல் அல்ல என்பதை ஏற்கெனவே நிரூபித்தவர். எனவே அவரை நாம் நம்பலாம். ஹூவர் ஆட்சியில் போல பொருளாதாரத்தில் அவரது ஆட்சி அமெரிக்காவை இன்னுமொரு Great Depression இற்குக் கொண்டுபோகுமானால் அதுவும் வரவேற்கப்பட வேண்டியதே. அமெரிக்க ஏகாதிபத்திய இரும்புக் கரங்களில் சிக்கித் தவித்த, முன்னேறத் துடிக்கும் வறிய நாடுகளுக்கு அது ஒரு தற்காலிக விடுதலையைக் கொடுக்கும். அவரைச் சுற்றியிருக்கும் MAGA விற்பன்னர்கள் வெற்றி பெறும் பட்சத்தில் அமெரிக்காவை இறுகப் பிணைத்திருக்கும் இஸ்ரேலிய அடிமைச் சங்கிலியை உடைத்துக்கொண்டு ட்றம்ப் சொல்லும் அந்த Golden Age ஐ நோக்கி நகரக்கூடியதாகவிருக்கும்.

ட்றம்ப் மது, புகை, போதை வஸ்து பாவனையாளரில்லை என்கிறார்கள். அதனால் இப்பேச்சு ‘விடிஞ்சாப் போச்சு’ catergory ஆக இருக்காதென்றே நம்புகிறேன்.