World

ட்றம்ப் நிர்வாகத்தின் அதியுச்ச பதவியை வகித்த கறுப்பினப்பெண் பதவி விலகினார்

அமெரிக்க நிர்வாகத்தின் ராஜாங்கச் செயலகத்தில் உதவிச் செயலாளராகப் பதவி வகித்த மேரி எலிசபெத் ரெய்லர், தனது பதவிலிருந்து விலகுவெதென அறிவித்துள்ளார். ட்றம்ப் நிர்வாகத்தில் ஒரு கறுப்பினத்தவருக்கு வழங்கப்பட்ட அதியுச்ச பதவி இதுவாகும்.

ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொலையைத் தொடர்ந்து உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டுவரும் கறுப்பின மக்களுக்கான நீதி கோரும் போராட்டங்களின்போது ஜனாதிபதி ட்றம்ப் நடந்துகொண்ட விதம் குறித்து அதிருப்தி அடைந்தமையினாலேயே தான் பதவி விலகுவதாக ரெய்லர் அறிவித்துள்ளார். “கறுப்பின மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்பாக ஜனாதிபதி விடுத்த அறிக்கைகளும், கருத்துக்களும், எனது அடிப்படை விழுமியங்களுடன் ஒத்துப்போகாதவையாக உள்ளன” என அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



ஜோர் ஃபுளோய்ட் கொலை தொடர்பாக அமெரிக்காவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் பற்றி இராங்கச் செயலாளரான மைக் பொம்பியோவும் எதுவிதமான கருத்துக்களையும் தெரிவிக்காமல் மெளனம் காப்பதால், அவ்ரின் கீழ் பணிபுரியும் வெளிநாட்டுப் பிரதானிகளும் இக்கட்டான நிலையில் விடப்பட்டுள்ளார்கள். நாட்டின் அதியுயர் பிரதானி, ஜனாதிபதியுடனான தனிப்பட்ட உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ளும் அதே வேளை, அவரின் கீழுள்ள திணைக்களப் பணியாளர்களைப் பற்றி எந்தவித அக்கறையும் இல்லாது, அவர்களுக்கு வழங்க வேண்டிய தலைமைத்துவத்தையும் வழங்காது கைவிட்டு விட்டார் என அவர்கள் கவலையுற்றுள்ளதாக அறியப்படுகிறது.

இந்நிலையில், உதவி ராஜாங்கச் செயலாளரான ரெயிலர் தனது கருத்தை பகிரங்கமாகவும் ஆணித்தரமாகவும் வெளியிட்டிருந்தார். அதில் ” நடந்துகொண்டிருக்கும் விடயங்களால் மனதுடைந்திருக்கும் எனது சக பணியாளர்களுக்கு நான் தெரிவிக்க விரும்புவது “இவ்விடயத்தில் நீங்கள் தனிமையிலில்லை, நானும் உங்களுடனேதான் இருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

ரெயிலரின் பதவி விலகல் பற்றி, மைக் பொம்பியோ இதுவரை எந்தக்கருத்தும் கூறவில்லை.